மே 10, 2011

தமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது?





இப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என
எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்களை காணலாம்.
அப்படி என்ன தமிழகத்து ஆண்கள் ஆண்மையற்று போய்விட்டனர்? திருமணமே வேண்டாம்
என்கிறார்களா? பிறப்பு விகிதம் குறைந்துபோய் இருக்கிறதா ? அல்லது வேறு ஏதாவது
குறைபாடா? நாம் சிந்திக்க தொடங்கினோம்.


இன்றைய நிலையில் இப்படி பட்ட விளம்பரங்களை விட முறையான
மருத்துவத்தை முன்னெடுத்து மக்களை நல்வழிபடுத்தவேண்டிய சூழலில்
பெரும்பான்மை மாத்துவார்கள் இல்லை என்பதாக கொள்ளலாமா ? தெரியவில்லை
நீங்கள்தான் சிந்திக்கவேண்டும். உங்களிடம் விட்டுவிடுகிறேன்.

இன்றைய சூழலில் ஆண்மை குறைவிற்கு எந்த கேடும் நிகழவில்லை ஆனால் இதை
தவறாக புரிந்து கொள்ள பட்டு இருக்கிறது அல்லது தவறாகபுரியவைக்கப்பட்டு உள்ளது
தவறான கருத்தாக்கத்தை புகுத்தப்பட்டு உள்ளது .பழங்கலங்களில் பாலியல்
குறைபாடுகள் இப்படி பேசப்படவில்லை காரணம் அண்டைய சூழல் அப்படி அனால்
எல்லாவற்றிற்கும் தெளிவான விளக்கங்கள் கிடைத்து வந்தன .

உடலை கண்ணேபோல் காத்து வந்தனர் கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை
மனிதத்தை முறையாக பராமரித்து வந்தது. இன்றைய தனியுடமை அமைப்பு மனிதனை
பேயாட்டம் ஆடவைக்கிறது .காரணம் மனிதன் இன்று பொறியாகி (இயந்திரம் ) போனான் உடல் நிலை
சரியில்லை என்றாலும் ,அல்லது உடலியல் குறைபாடு என்றாலும் மனிதன் பொறி ( இயந்திரம்)
போல உடலை வெட்டி எடுக்கும் மாற்று (பொறி )இயந்திரத்தை பொருத்தி மனிதத்தை
ஊர்ந்து செல்ல வைக்கும் செப்படி வித்தைகள் செப்பனே நடக்கிறது ஆனால் மக்களோ
அறியாமையில் உழல்கிறனர்.

இன்றைய ஆண்மைக்குறைபாடு என்பது பல்வேறு காரணங்களை உள்ளடக்கியது .
சித்தமருத்துவம் மனிதனின் வாழ்க்கைமுறையை அழகாக படம் பிடித்து காட்டுகிறது
எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்றும், பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை
பாலுறவு கொள்ளவேண்டும் எனவும் கூறுகிறது. மூத்த பெண்களுடன் பாலுறவு கூடாது
பகலில் பாலுறவு கூடாது . என்னை தேய்த்து குளித்த அன்று பாலுறவு கூடாது என
பல்வேறு வாழ்க்கைமுறை மெய்மங்களை பாமரத்தனமாக பட்டியலிட்டு காட்டுகிறது

இன்றைய அவசர உலகம் எல்லா இன்பங்களையும் உடனே பெற்றுவிட வேண்டும் என
தூண்டுகிறது . பாலுறவை சிற்றின்பம் என்றனர் முன்னோர் . அதை பேரின்பமாக
கருதி விரைந்து எல்லா இன்பங்களை பெற்றுவிட துடித்து இளமையிலேய முடங்கி
போகின்றனர் . இவர்களுக்கு நாம் பொறுமையாகவும் அமைதியாகவும் சொல்லுவது
புரியாமலே போகிறது . பாலுறவு இன்பத்தினை நீடிக்க வேண்டி பல்வேறு ஆங்கிலமுறை
மருத்துவத்தை நாடுகிறனர் இது மாட்டிற்கு ஊசி போட்டு பால் கறப்பதற்கு
ஒப்பானது மாட்டிற்கு தீனிபோட்டு பால்கறக்கும் பழக்கம் போய் இன்று ஊசி
போட்டு பால்கரப்பது வழக்கமாகிப்போனது இது எப்படி சரியாகி வரும் என்பது
புரியவில்லை . இது மாட்டையும் மனிதனையும் அல்லவா நோயாளியாக்கும்?

வேதனை தரக்கூடிய செய்தி என்னவென்றால் இன்று பாலியல் இன்பத்தை, பாலியல்
தொடர்பான படங்களை பார்த்து அதில் வரும் காட்சிகளைபோன்று தானும் அப்படி
பாலுறவு கொள்ள வண்டும் என என்னுகிறனர். பாலுறவு காட்சிகள் படமாக்குவது ஒரு
நாளில் எடுப்பது அல்ல பலநாளில் எடுக்கப்பட்டதாகும் அதை பார்த்து தானும் நீண்ட
நேரம் பாலுறவு கொள்ள நினைப்பது நுகர்வு பண்பாடு இது மனிதத்தை
நோயாளியாக்கும். பாலுறவு காலத்தில் உடல் அளவில் பல மாற்றங்கள் நிகழுகிறது மனித
உடல் வெப்பமடைகிறது இந்த வெப்பத்தை தணித்து கொள்ள எந்த நடவடிக்கையும்
எடுப்பதில்லை . இவற்றால் பல்வேறு பாலுறவு கோளாறுகள் நிகழுகிறது. அதேவேளை மனித
உடல் விந்துவை உற்பத்தி செய்யும் பொறி (இயந்திரமல்ல ) நல்ல தரமான உணவுகள்
காய்கள் பழங்கள் எடுத்து கொள்ளவேண்டும்.கீரைகள் எடுக்கவேண்டும்

மனிதனின் இரத்தத்தில் சர்கரையின் அளவு கூடினால் பாலுறவு இன்பம்
குறையும் .அது தான் சர்க்கரை நோய்கண்டவர்கள் பாலுறவு சிக்கல் களுக்கு
ஆளாகின்றனர் .மிகையான அச்சம் , சினம் போன்ற நிலைகளிலும் பாலியல் கோளாறுகள்
உண்டாகிறது. உடலில் பவேறு நோயுள்ள நிலையில் பாலுறவு கோளாறுகள் உண்டாகிறது .
எனவே பாலுறவு கோளாறுகளுக்கு அது என்ன காரணத்தினத்தல் உண்டாயிற்று என
கண்டறிந்து முறையாக தீர்க்க வேண்டும் . பெரும்பாலும் சிக்கலே இருப்பதில்லை .
சிறிய சிறிய சிக்கல் கலை பெரிதாக்கி கொள்ளுவதுமுண்டு .தரமான தவச(தானிய ) முளைகட்டிய
உணவுகளை எடுத்து கொள்ளுவதாலும் . தரமான பழங்கள் , முறையான உணவுகள் எடுத்து
கொள்ளுதல் , எண்ணெய் தேய்த்து குளித்தல் பதினைந்து நாளுக்கு ஒருமுறை பாலுறவு
கொள்ளுதல் இப்படி முறையான பழக்கங்களை கடைபிடித்தால் பாலுறவு சிக்கல்கள் தோன்ற
வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

*சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .*More than a Blog Aggregator

மே 02, 2011

நரம்பு தளர்ச்சியா (இஸ்டீரீயா) பேய் பிசாசா?




இப்போது ஊர் புறங்கள் முதல் பட்டணம் வரை நோய்கள் கண்டுவிட்டால் முறையான மருத்துவம் செய்து கொள்ளும் முன் மூடபழக்கவழக்கங்களை நாடும் பழக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. பழமை என்பது அறிவர்கள் (சித்தர்கள் ) கண்டதுஅறிவர்களின் இந்த காலம் சித்தமருத்துவத்தின் பொன்னுலகம் எனலாம். மனித இனத்தின் மருத்துவ மறுமலர்ச்சி யின் காலமான இந்த காலத்தில்தான் அறிவியல் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நின்றன. இவர்கள்தான் அறிவியல் அடிப்படையில் நோய்களை இனங்கண்டனர்.

வளர் இளம் பருவம்.

மனித இனத்தின் முகாமையான காலம் என்றால் துள்ளித்திரியும் விடலைபருவம்தான் எனலாம். அந்த காலம் உன்னதமான வசந்த காலம் . இந்த காலத்தில் தான் முறையான சரிவிகித உணவு தேவை குறிப்பாக பெண்குழந்தைகள் எனில் கூடுதல் கவனிப்பும் கூடுதல் உணவுகளும் தேவை . அப்படி இல்லை என்றால் இவர்களின் எதிர்காலம் நோயுடன் கூடிய போராட்டம் தான் எனலாம்.




சரிவிகித உணவுகள்

இதற்கான சரிவிகித உணவுகள் என தனியான எனது இடுகை காண்க ... இந்த விடலைபருவத்தில் பதின் பருவத்திலும் முறையான வழிகாட்டலும் நேரிய வாழ்கை முறையும் முறையான ஊட்டமுடன் கூடிய உணவுகளும் தேவை.தரமான தவச (தாணிய உணவுகள் ) கீரைகள், பழங்கள் , கொழுப்பு நிறைந்த கொட்டைகள் போன்றவற்றை முறையாக வழங்க வேண்டும் . இதனுடன் எரிச்சல், பதற்றம் , போராட்டம் போன்ற உளவியல் போராட்டம் பெண் குழந்தைகளிடம் காணப்பட்டால் இந்த உளவியல் போராட்டங்களும் நோய்களை உண்டாக்குகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். பல்வேறு நோய்களை போலவே நரம்பு தளர்ச்சி நோயும் உண்டாகி விடலை பருவபெண் குழந்தைகளை நோவில் ஆழ்த்து கிறது.




நரம்பு தளர்ச்சியா ? பேயா ?

முறையான உணவுகளும் முறையான வாழ்க்கை முறையும் கொண்டிராத பதின்பருவத்தினார் குறிப்பாக பெண்குழந்தைகள் நரம்புதளாச்சி நோயாளி யாகின்றனர் . இந்த நோயை இனங்கான முடியாத மேதாவிகள்? பெண்குழந்தை களின் எதிர்காலத்தை கேள்விகுறியாகிறனர் . அறியாமையில் உள்ள பெற்றோர்கள் இதை பேய் , பிசாசு ,காட்டேரி, முனி, கன்னி , என தங்கள் அறிவிற்கும் ? அறியாமைக்கும் ஏற்றபடி பெயரை இட்டு அழைகிறனர்.

அறியாமையில் உழல்பவர்களே ...

இப்படி பேய் பிசாசுகளும் இருப்பது உண்மை என்றால் பல்வேறு வகையில் கொலைக்கு உள்ளாகிறவர்கள் எவரும் பேயாக மாறி கொன்றவரை பயமுறுத்தி அல்லது அவரை கொன்றதாக வரலாறு இல்லை . குறிப்பாக எடுத்து கொள்ளுவோம் . ஈழத்தில் பல இலட்சம் பேரை படுகொலை செய்தான் சிங்களவன். எந்த சிங்களனையும் பேயாக மாறி பழிவாங்க வில்லை அல்லது கொன்று அழிக்கவில்லை. இதிலிருந்து தெரிவது யாதெனில் பேய் என்பது மூடத்தமானது முட்டாள் தனமானது எண்பது தெளிவாகலாம்.

அறியாமையில் உழல்கிறவர்கள்...

நரம்பு தளர்ச்சிக்கான காரணங்களை நீக்கி நோயை வென்றெடுக்க ஆங்கில முறை மருத்துவத்தில் மருந்துகள் இல்லை அதனால் நோய்க்கான காரணங்களை அவர்கள் வேறுவிதமாக திசை திருப்பி விடுகின்றனர் . இந்நோய்கள் கண்டவர்களை பாவப்பட்டவர்களாக பாவிக்கின்றனர் . ஆனால் தமிழ மருத்துவத்தில் இன் நோய்க்கான காரணங்களும் மருந்துகளும் உண்டு . சித்த மருத்துவம் நோய்களுக்கு மருந்து அளிப்பதில்லை என்பது தெரிந்ததே ஆனால் நோய்க்கான காரணங்களை கண்டறிந்து நோயை வென்று எடுக்கிறது .
பெண்மையின் மிக மூகாமையான உடல் உறுப்புகளில் வியக்க தக்க உறுப்பான கருப்பையின் உட்சுவர்களில் உண்டாகும் குறைபாடு எனலாம் . கருப்பையின் உட்சுவர்களை காக்கிற அரத்த நரம்புகளில் உண்டாகும் பழுதே இந்த நோய்க்கான காரணமாகும். இதனால் கருப்பையின் நரம்புகள் செயலற்று போவதால் வளர் இளம் பெண்களுக்கு மயக்கம் வருவதும் ,தன்னையறியாமல் பேசுதல் ,சிரித்தல் , ஆடுதல், குதித்தல், பம்பை உடுக்கைகளுக்கு ஆடுதல் போன்ற செயல் களை செய்ய தூண்டுகிறது . இந்த சமயத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாதவர்கள் ஆகிறார்கள் . இப்படிப்பட்ட வளர் இளம் பருவத்தினர் ( விடலை பருவத்தினர் ) கனவுலகிலேயே வாழுகிறனர் . கருப்பை சார்ந்த நரம்பு தளர்ச்சி நோயே இப்படி செய்விக்கிறது . முறையான தமிழ மருத்துவத்தில் எண்ணற்ற மருந்துகள் உண்டு .

தீர்வுகள்...

இன் நோய்க்கு எண்ணற்ற மருந்து உண்டு என்றாலும் இந்த நோய்க்கு உளவியல் காரணங்களை நீக்கி முறையான உணவுதிட்டங்களை கடைபிடிக்க வேண்டும். உடலையும் உள்ளத்தையும் நேர் வழியில் செலுத்த வேண்டும் . சரிவிகித உணவுகளும் தரமான தவச (தானிய ) உணவுகளும் கீரைகளும் பழங்களும் , கொழுப்பு நிறைந்த கொட்டைகளும் உணவில் சேர்க்க வேண்டும் .
நோய் முற்றிய நிலையில் எட்டிமர பட்டை கொண்டு வந்து பத்து கிராம் எடுத்து தட்டி போட்டு இருநூறு மிலி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து குடிநீராக்கி குடிக்க நல்ல பலனை அடையலாம்
.
சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் திடமான குமுகத்தை படைப்போம் .More than a Blog Aggregator

ஏப்ரல் 25, 2011

பனை / பதநீரின் மருத்துவ குணங்கள்




இன்று நாம் பழமை பற்றி பேசுவது வெறுமனே வரட்டுவாதம் அல்ல . உண்மையில் நாம் மண்ணில் மாற்றம் வேண்டும் என்பதற்கு தான். முந்தய இடுகையில் அம்மைக்கு யாழ்ப்பாணத்தில் பதநீர் வழங்குவார்கள் என ஹேமா குறிப்பிட்டு இருந்தார் . இந்த காலத்தில்தான் பதநீர் இறக்குவார்கள் எனவே அதைப்பற்றி எழுதலாமே என எண்ணி இந்த இடுகை .

இந்த பதநீர் ஒரு சைவ பானம்அதுமட்டும் அல்ல நமது தமிழதேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம் . நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும் ,பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள் .

தொழு நோயை நீக்கும் பதநீர்

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி
பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ் குறிப்பு உண்டு .

மாதவிடாய் தடை

மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி . வாய்வு , காட்டி முதலியவற்றினால் பெண்கள்அவதிபடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான சன்னி நோய்போல உண்டாகும் இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .

இரத்த கடுப்பு

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .

பதநீர்

இந்த பதநீர் ஒரு சிறப்பான நம் தேசிய குடிநீர் எண்பது நாம் அறிந்ததே இந்த பதநீரை இறக்க தமிழ் நாட்டில் தடை உள்ளது காரணம் வேலைவாய்ப்பில்லாத தமிழர்கள் வேலை பெற்றுவிடுவார்கள் என்பதாக இருக்குமோ ? அதுமட்டும் அல்லாமல் இந்த பதநீர் இறக்குவதால் மற்ற மயக்கப் பொருட்கள் (அரசுவிற்பதுதன் ) விற்பனை குறையும்தானே ?அதனால் முதலாளித்துவம் பயனடையாது தானே ? வருகிற புதிய அரசாகிலும் இந்த பதநீர் இறக்க மக்களுக்கு வாய்பளித்து பனைபொருட்களை சந்தை படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.

ஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள்

௧ .சக்கரை 28 .8 கிராம்
௨. காரம் 7 .௨ கிராம்
௩. சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்
௪. இரும்பு சத்து 5 .5 மி.கிராம்
௫ பாசுபரசு 32 .4 மி.கிராம்
௬. தயமின் 82 .3 மி.கிராம்
௭ ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்
௮ அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்
௯ . நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்
10 புரதம் 49 .7 மி.கிராம்
௧௧. கலோரிகள் 113 .3 மி.கிராம்

இதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் கருக்கலத்தில் / பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. எல்லோரின் இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.

பாலுணர்வை கூட்டிட

இதில் இயல்பாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவகுரிப்புகளும் காண கிடைக்கிறது சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை இதில் முறையான அறிவியல் ஆய்வுகள் கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் சித்த மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திட வேண்டும்
.
அழகான பனை மரம் ...அடிக்கடி நினைவில் வரும் ...அடிக்கடி நினைவில் வரும் ...


சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...