அக்டோபர் 23, 2010

போதையை ஒழி புகையை அழி





  • போதையை ஒழி
  • புகையை அழி


இன்று மயக்கம் தரும் போதை பழக்கம் அரசின் துணையோடு எல்லோருக்கும் பழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது .இதனால் அடுத்த கட்ட தாலைமுறை முற்றிலும் நோயாளியான சமுதமாக மாறிப்போக வாய்ப்புண்டு
எனவே இன்றே இலைய சமூகத்தினை அவற்றில் இருந்து மீட்டெடுக்க வண்டிய நிலையில் உள்ளோம் . போதை பழக்கத்தினால் எவருக்கேனும் நலம் உண்டோ ?

ஒட்டு மொத்த சமூகத்திற்கே அது கெடுதலை செய்கிறது . அப்படி பட்ட செயலை நாம் ஏன் தொடரசெய்ய வேண்டும் . யாருக்கு இதனால் பலன் . குடிப்பவருக்கா ?
அல்லது இந்த சமுகத்திற்கா ? யாருக்குமில்லை தொடுவானேன் ?


மயக்கப் பொருட்களினால் (குடி ,புகை ) வரும் கேடுகள்
.
௧.தொண்டை புண் வருகிறது .

௨. நுரையீரல் இறுக்கம் ஏற்ப்படுகிறது .

௩.காசநோய் தோன்றுகிறது .

௪. குருதி நாள இருக்கநோய் தோன்றுகிறது .

௫. குருதி (இரத்த ) சோகை தோன்றுகிறது .

௬.கல்லீரல் சிதைவு ஏற்ப்படுகிறது .

௭. காமாலை தோன்றுகிறது .

௮. நரம்பு தளர்ச்சி தோன்றுகிறது .

௯. கை ,கால் நடுக்கம் ஏற்ப்படுகிறது .

௧0 .உடல் சோர்வு தோன்று கிறது .

௧௧ .எதிலும் பற்றின்மை ஏற்ப்படுகிறது .

௧௨. பசி இன்மை தோன்றுகிறது .


௧௩ .நாவில் சுவை இன்மை தோன்றுகிறது .


௧௪ .கண்பார்வை குறைபாடு தோன்று கிறது .

௧௫. குத்திருமல் தோன்றுகிறது .


௧௬.உணவு வழிஅழற்சி தோன்றுகிறது .

௧௭ .தலை மயிர் உதிர்தல் , நகம் சிதைவு உண்டாகிறது .

௧௮ .கை ,கால் களில் குருதி ஓட்டத் தடை ஏற்ப்பட்டு கருமைநிறம் தோன்றல் ,உணர்வின்றி போதல் போன்றவை ஏற்ப்படுகிறது .

௧௯. ஆண்மை குறைபாடு தோன்றுகிறது , பெண்களுக்கு பெண்மை குறைபாடு தோன்றுகிறது .

௨0 .நினைவாற்றல் படிப்படியே குறைகிறது .


இப்படி பலநோய்கள் நாம் வீட்டு கதவை தட்டி அழைகிறது அது மட்டுமல்லாமல் நாம் பணமும் செலவாகிறது . பலரிடம் நன்மதிப்பும் கெடுகிறது
தொடர்ந்து பத்து ஆண்டுகள் மது அருந்துவதால் நுரையீரல் புற்று, கல்லீரல் புற்று , குருதிபுற்று , என நோய்கள் தொடர்ந்ந்து வந்து அலைகழிக்கிறது .அதனால் குடிப்பவர்கள் , புகை பிடிப்பவர்கள் அதை விட்டு ஒழித்து விடலாமே
நீங்க என்ன நினைக்கின்றீர்கள் ? எனக்கு எழுதுங்களேன் ..

அடுத்து : ஆண்மைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறதுMore than a Blog Aggregator

அக்டோபர் 20, 2010

மூலிகைகளின் அறிவியல்

மூலிகைகள் என்றதும் தமிழகமும் , சித்தர்களும் தான் நினைவுக்கு வருவார்கள் .தமிழ மருத்துவத்தின் மூலவர்கள் சித்தர்கள் என்பது அனைவரும் அறிந்ததே .
இவர்கள் மண்ணையும் மொழியையும் பொன்னே போல் காத்தனர் .
இன்றைய அவசர உலகம் நோய்களை தேடிஓடுகிறது . நோயை நீக்கும் அளவற்ற மூலிகைகளும் மருந்துகளும் தமிழ் மண்ணில் விரிந்திருக்கிறது . இந்த நுட்பங்களை பருண்மையாக ஆய்வு செய்த சித்தர்கள் இம் மூலிகைகளை இனம் கண்டு மக்களுக்கு கொடையாக சித்தர்கள் வழங்கினர் . தமிழரின் மெய் அறிவியலை கண்ட மேலை நாட்டினர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்குள்ள அறிவியலையும் ,தத்துவங்களையும் கற்க
வந்தனர் .இங்குள்ள அறிவு செல்வங்களை கற்று சென்றது வரலாறு சுட்டிக் காட்டுகிறது அனால் பாவம் தமிழகத்து தமிழர்கள் தொலைகாட்சி பெட்டியை விட்டு நகரமருக்கின்ற்றனர் . நோயாளி யாக மடிய தவம் கிடக்கின்றனர் .
மூலிகைகளின் பயனை பெறுகின்றவர்கள் மிகவும் குறைந்த விழுக்காட்டினரே .
மீதம் உள்ளோர் திரையரங்குகளில் தங்களின் தலைவனை தேடியழிகிண்றனர்.
தமிழகத்தில் உள்ள மூலிகைகள் உலக சிறப்பானவை கரணம் இந்த மண்ணும் , இயற்க்கை சூழலும் தான் . உலக அளவில் நடத்தபப் பட்ட ஆய்வில்
தரமான மூலிகைகளின் விளைச்சலுக்கு ஏற்ற இடம் தமிழகம் என கண்டறியப்பட்டுள்ளது .இதனால் தான் உலக அளவில் தமிழக மூலிகைகள் சிறப்பான இடத்தை பெறுகின்றன .
ஒவ்வொரு மூலிகைக்கும் தனியான மருத்துவ குணம் உள்ளதை சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டனர் . குறிப்பாக வடக்கிருந்து வரும் வேர்களுக்கு தனியான குணம் உள்ளதாக கண்டறிந்தனர் . சித்தர் களின் காலங்களில் நுண்ணிய கருவிகள் இல்லை என்பது நாம் அறிந்ததே இப்படி தங்களின் மெய்யறிவினால் மக்களுக்கு கொடையாக வழங்கியதுதான் நாம் சித்த மருத்துவம் .
இந்த மூலிகை களை பதப்படுத்தும் காலம், பதப்படுத்த வேண்டிய முறை போன்ற வற்றை தெளிவாக்கியுள்ளனர் . இவைகள் நாம் பின்பற்ற வேண்டியே தவிர வேறல்ல .
மனித உடலை வளி , அழல் , ஐ என பகுத்த சித்தர்கள் உடல் வகைக்கு ஏற்ற மூலிகை களையும் இனம் கண்டனர் . ஒரேநோய்க்கு உடல் வகைக்கு ஏற்ற வகையில் மருந்துகள் மாறுபடும் என்பது சித்த மருத்துவ கோட்பாடு . சித்த மருத்துவம் சிறுவித உற்பத்திமுறையை போதிக்கிறது . அதாவது பரந்துபட்ட மக்களின் நலன்களை கொண்ட மருத்துவம் என்ற கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்பதற்காக சொல்லப்பபடுகிறது . அப்போத்துதான் மருத்துவமும் செழுமையடையும் மக்களும் வரைவில் நோயில் இருந்து விடுபடுவார்கள் என்ற கண்ணோட்டத்தில் சித்தர்கள் இப்படி பகுத்தனர் .
நோயை நீக்கிக் கொள்ள வேண்டுமெனின் அதக்காக முறையான மருத்துவரை நடவேண்டுமே யன்றி வியாபாரியை நாடி நாம் சென்றுவிடக்கூடது அப்போதுதான் சித்தமருத்துவம் செழிக்கும் .
மூலிகைகள் முறைப்படி பறித்து , நிழலில் உலர்த்தி மரஉலக்கையால் இடித்து துணியில் வடிகட்டி பயன்படுத்த வேண்டும் . இந்த மூலிகைகள் மூன்றில் இருந்து ஆறுமாதங்கள் வரை முழுமையான பலனை தரும் .
இந்த அறிவியலை கண்டு நோய் வென்று நீடுவழ்வோம் . .........


அடுத்து பெண்களின் அந்த மூன்று நாள்சிக்கல் களும் தீர்வுகளும் ....More than a Blog Aggregator

அக்டோபர் 05, 2010

எரியோம்பல் (ஆசனபயிற்சி) செய்வோம் .




எரியோம்பல்
(ஆசனபயிற்சி) செய்வோம் இன்றைய பரப்பான உலகத்தில் எரியோம்ம்பல் செய்யவது முதல் எதற்கும் நேரமின்மை என்றே எல்லோராலும் சொல்லப்படுகிறது . இப்படி நாம் பறந்து கொண்டிருந்தால் மனிதன் நோயாளியாகி மடிவான் . இதற்கு என்னவழி நாம் பழங்கால அறிவர்கள் கற்றுத்தந்த பாடம்தான் எரியோம்பல் செய்வது .





எரியோம்பல் (ஆசனபயிற்சி ) செய்வதால் :
@ . அகவை கூடுகிறது
.
@ நினைவாற்றல் பெருகுகுகிறது
.
@ உளம் செம்மை யடைகிறது
.
@ ஆண்மை பெருகுகிறது , பெண்களுக்கு பெண்மை மெருகேறுகிறது
.
@ நோயற்ற வாழ்வை தருகிறது .

@ உடலை அழகாக ஆக்குகிறது
.
@ பிணிகளை நீக்குகிறது .

@ சோர்வையும் சோம்பலையும் ஒழிக்கிறது
.
@ உள்ளத்திற்கு அமைதியை தருகிறது
.
@ நீடித்த இளமையை தருகிறது .

@ தேவை இல்லாத சதையை குறைக்கிறது
.
@ இதயம் ,நுரையீரல் ,சிறுநீரகம் தூய்மையடைகிறது .

@ உடலுக்கு சக்தியை தருகிறது
.
@ அறிவு கூடுகிறது .

@ குருதி ஓட்டத்தை சீராக்குகிறது
.
@ உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது .

@ சினத்தை குறைக்கிறது . அமைதிப்படுத்துகிறது
.
@ சலனம் இல்லாத உளத்தை தருகிறது
.
@ சிந்திக்கும் ஆற்றல் பெருகுகிறது .

@ வெற்றிக்கு இட்டுக்கொள்கிறது
.
@ நோய் எதிர்பற்றலை ஊக்குவிக்கிறது
.
@ நரம்புகளை உறுதியாக்குகிறது
.
இவைகள் குறிப்பிட்ட பலன்கள் . முறையாக நாளும் எரியோம்பலை செய்ய மனிதன் அடையப்போகும் பலன்கள் எண்ணிலடங்கா.எனவே முறையாக எரியோம்பல் செய்வோம். எரியோம்பல் செய்வதற்கென முறைகள் உண்டு .அப்படிசெய்தல்தான் . முழுமையான பலனையும் பின் விளைவுகளையும் தவிர்க்கமுடியும் .
எரியோம்பல் முறையாக செய்யும் முறைகளை தொடர்ந்து பார்ப்போம்..........
அழகு வேண்டுமா? More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...