செப்டம்பர் 13, 2010

கீரைகள் மருத்துவம் .

@ புளிசக்  கீரை , முளைக்கீரை , இரண்டையும்  சேர்த்து  சாப்பிட்டால்  நன்கு  பசி  உண்டாகும். .
@ மணத்தக்காளி  கீரை , பருப்புக்  கீரை  இரண்டையும்  சேர்த்து  உண்ண வயிற்றுபுண்
குணமாகும் .
@ முளைகீரை , வெந்தயக்கீரை , மனத்தக்களிகீரை , சேர்த்து  சிறு பருப்புடன்  உண்ண  நோய்  எதிர்பற்றல்  உண்டாகி   நோய் விலகும் .
@ கறிவேப்பிலை, புதினா , கொத்தமல்லி  சேர்த்து கீரைத்தண்டையும்  சேர்த்து சமைத்து  உண்ண  மூட்டு  வலிகள்  வாதநோய்கள்  நீங்கும்  நோய்  எதிர்பு  ஆற்றல் கூடும் .
@ முளை  கீரையுடன் ,வல்லாரை  கீரை  சேர்த்து   பருப்புடன்  உண்ண  நினைவாற்றல்  கூடும் .
@ நச்சு கொட்டை கீரையை  பருப்பு சேர்த்து   உண்ண  வாயிற்று  புண்  ஆறும் .
@ மூஞ்சியில்  உள்ள   பரு  பாலுண்ணி  மறைய   அம்மன்  பச்சரிசி செடியை  ஒடித்தால்
வரும்  பலை தடவ   நல்லகுணம்  கிடைக்கும் .
@ துத்திக் கீரையை  மஞ்சள்  சேர்த்து  விளக்கெண்ணையில்  வதக்கி  கட்டினால்  மூல  நோயில்  உண்டாகும்  வலிகள் நீங்கும் .
@ நல்ல  வேலை  கீரையுடன் (கைப்பிடி ) மூன்று  மிளகு மஞ்சள்  சேர்த்து  காலையில் உண்ண vayidru   பூசிகள்  ,புழு , நாக்குப்புசிகள்   நீங்கும் .
@ காணாம்  வாழையை   கைப்பிடி  அளவு  அரைத்து  சாப்பிட  உடல்  சூடு  குறையும் .
@ காணாம்  வாழையை   அரைத்து  சாப்பிட்டால் சிறுநீர் எரிசல்  தீரும் .
@ காணாம்  வாழையுடன் துத்தியை  அரைத்து  சாப்பிட  மலசிக்கல்  தீரும் .
@ குப்பை கீரையை  தொடர்ந்து  சாப்பிட  உடல்  எடை குறையும் .
@ முடக்கத்தான்  கீரையுடன்  சிறிது  சதக்குப்பை  சேர்த்து  கசயமக்கி  சாப்பிட சிறுநீர்  தாரளமாக  பிரியும் .
@ லெட்டுஸ்   கீரையை  தொடர்ந்து சாப்பிட   குருதி  துய்மை  அடையும் .
@ கொடி பசலை  கீரையையும்   கொத்தமல்லி விதை, சீரகம்  இவற்றை கசயமக்கி   சாப்பிட   மலசிக்கல்  குணமாகும் .
@ காசினி   கீரையுடன் சீரகம் ,மஞ்சள்  சேர்த்து  கசயமக்கி   சாப்பிட  கல்லீரல்  வீக்கம்  குணமாகும் .
@ தூது  வலை  கீரையை  சூரணித்து  நாளும்  உண்டுவர  காது  தொடர்பான பிணிகள் , தடுமன்  நீங்கும்.                 More than a Blog Aggregator

செப்டம்பர் 12, 2010

காதில்  சீழ்வடிதல் .

நல்லவேளை  இளைசற்றினை  ஒருதுளி  கதில்விட்டுவர   குணமாகும் .

அறிவு  கூர்மை  அடைய .
          வல்லரை  இலையை  உலர்த்தி  பொடியாக்கி  நெய்யில்  கலந்து  அருந்தலாம் .
கொரைக்கிழங்கை  தூளாக்கி  தேனில்  அருந்திவர  அறிவுகூர்மை  அடையும் .  உடல்  அழகு  கூடும் . பசி  உண்டாகும் .
விதை வீக்கம்  குணமாக .
           மாவிலங்கம்  பட்டை 150 கிராம்  முகிரட்டை  வேர்  75 கிராம்  சிதைத்து  இரண்டு  லிட்டர்  தண்ணீரில்  காய்சி அரை  லிட்டராக்கி  சிறிது  சர்க்கரை  சேர்த்து  நாளும்  மூன்று
வேலை  அருந்திவர   குணமாகும் .
கண்  பார்வை தெளிவடைய .
ஒரு பிடி பொன்னாங்கண்ணி  இலையை  ஒருபிடி  தெனமும்  மென்று  தின்னலாம் .கேரட்  பச்சையாக மென்று தின்று  பால் அருந்தலாம் . தினமும் சிறுகீரை , முருங்கைகீரை , உணவில்  சேர்த்து  உண்ணலாம் . திரிபலா  சேர்ந்த  எண்ணையை
தலைக்கு  தேய்த்து  குளிக்கலாம்  கண்பார்வை  தெளிவடையும் .
தலை வலி  நீங்க.
கிழநெல்லி  சாரு ,உத்தாமணி  இளைசாரு ,குப்பைமேனி இலை சாரு  சமஅளவு  எடுத்து
அதேஅளவு  எள்  எண்ணெய் சேர்த்தது  காய்ச்சி  மூக்கில்  இரண்டுதுளி விட்டுவர  பீனிசம் (சைனசு ),ஓயாத  தலைவலி  நீங்கும் .More than a Blog Aggregator

செப்டம்பர் 09, 2010

.சித்தர்கள் கண்டட நோய்களின் பட்டியல் .

வாதம்(வளிநோய்)               84 .
பித்தம்  (அழல்நோய் )          48
கபம்  (ஐ நோய் )                     96
தனுர்வாயு                             300
சயம்                                            7
சூலை                                      200
பாண்டு                                      10    
கண்நோய்                               96
சிலந்தி                                     60
குண்மம்                                  08
சன்னி                                       76
கழலை                                     95
சுரம்                                          85
மகோதரம்                                07
தலைவீக்கம்                            05
உடல்வீக்கம்                             16
பிளவை                                     10
படுவன்                                     11
குமிழி                                         07
பீலிகம்                                       08
வசியம்                                     05
கரப்பான்                                   90
கெண்டை                                 10
நீர்நோய்                                    05   
விசநோய்                                  16
காதுநோய்                                 10        
விக்கல்                                       10
அரோசகம்                                  05
மூக்குநோய்                              10
கடிதோடம்                               500
காயம்குத்து  வெட்டு             700
கிரந்தி                                          48
பொறிவிடம்                            800
நீர்க்கோவை                            200
துடிநோய்                                  100
பிள்ளைநோய்                          100
காமாலை                                  012
ஆகமொத்தம்                          4448

நோய்வென்று  நீடு  வாழ்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...