டிசம்பர் 03, 2012

திருமணத்திக்கு ஆயத்தமாவோம் 4




      வணக்கம் உறவுகளே . உங்களின் அளப்பரிய பின்னூட்டங்கள்  என்னை  உண்மையில் வியக்க வைக்கிறது  எப்படி  தமிழர்கள்  அறிவிற்கு  அறிவியலிற்கு முக்கியத்துவம்  கொடுக்கிறார்கள்  உடலை எப்படி பேணி வளர்க்கிறார்கள் என  பார்க்கும் பொது மிகவும் மகிழ்வாகவும்  பாராட்டும் படியாகவும்  நோய் நீங்கி  எந்த மருத்துவ நடுவத்தையும் தேடாமல்  எளிமையான  மூலிகைகளைக் கொண்டு  நோய் நீங்கி  நீடு  வாழ்ந்து  வருவது குறித்தும் நோய் கொள்ளுவது குறித்து எல்லை  இல்லா  அம்கிழ்வைத்தருகிறது பாராட்டுகள்  இங்கு எல்லோரும் நல்லவர்களே  உண்மையில்  மது அருந்து  கிறவர்களும் புகை பிடிப்பவர்களும்  ஏன்  செய்கிறார்கள்  குறிப்பிட்ட அந்த தொழிலை மேற்க்கொல்லுகிறவர்கள் .... கொல்லு ... பிழைப்பு  நடத்த வேண்டாவா  நமது விஜய்  மல்லையா போன்றவர்களும்  itc  போன்ற  நிறுவனங்கள்   வளர வேண்டாவா  எப்படி சிந்திகிறார்கள்  பாருங்கள்   தமிழர்கள் எப்போதும் பரந்த உளப்பாங்கு  உள்ளவன்  எவனாவது பசி  என்று வந்துவிட்டால்  ஓடி சென்று  தான் பட்டினியாக இருந்தாலும் அவனுக்குப் போட்டு  இவன் பசித்து இருப்பான் . பாருங்க  இவன்  தமிழன் வரலாற்றில்  இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக  தமிழ நாட்டை  ஆண்டதாக  வரலாறே  இல்லை எவ்வளவு  பரந்த மனப்பான்மை கொண்டவன் தமிழன்  ஈழத்தில்  கொத்து கொத்தாக   கொன்றார்கள்  அமைதி  காத்தோம் ... காவிரி , முல்லைபெரியாறு , கிருஷ்ணா  தண்ணீர் தரவில்லையா  நாங்கள் வெக்கமும் பட மாட்டோம் வேதனையும் பட மாட்டோம்  எங்கள்  தலைவர்கள் எல்லோரும்   தமிழர்களுக்கு பெரும் தீங்கு  செய்தார்களா  யார் சொன்னது அவனை உடனே காட்டிக் கொடு  இப்படி எல்லா  வேலைகளையும்  நாங்களே  தமிழர்களே  தமிழர்களை  அழிப்பெம் ...

         சரி செய்திக்கு வருவோம்  முற்போக்கான  இரண்டு குடும்பம்  இந்த குடும்பங்களில்  இருந்து திருமணம்  இனிதாய்  முடிகிறது . எல்லாமே எளிமையாக  பின்னர்  மணம்  முடிந்து பிள்ளை வீட்டாருக்கு மிகப் பெரிய குறை  காரணம்  பெண் வீட்டில்  மணமகனுக்கு மணக்கொடை (வரதட்ச்சனை ) கொடுக்க வில்லையாம்   போகட்டும்  இந்த பெண் மிகவும் அறிவாளி  அனால்  கொஞ்சம்  யாரு பேச்சையும்  கேட்பதில்லை  உணவு முறை  பெண்ணின் வீட்டில்  உள்ளது மாதிரித்தான்   சமைப்பர்கலாம் இங்கு மாமனார் , மாமியார் , மைத்துனர்  கணவர்  இப்படி  எவர் உணவுப் பழக்கத்தை பற்றியும் கவலை கொள்ளுவதில்லை   உண்மையில் மிகவும் மகிழ்வாக இருந்த கூட்டுக் குடும்பம்  பிரிவை எதிர்  நோக்கி காத்தது  இருக்கிறது. இது முற்போக்கனவர்கள்  என கூறிக் கொள்ளுகிற குடும்பம்  இங்கே இப்படி என்றல்  சராசரி  குடும்பம் எப்படி இருக்கும் பாருங்கள் ....

     எதற்கு பதிவு செய்கிறேன் என்றல்  ஒரு குடும்பம் என்பது    கோவில் போன்றது  இனிமைதரக் கூடியது  மகிழ்வை ஊட்டக் கூடியது   எப்போது வீட்டிற்கு போவோம்  ஆனந்தத்தைக் களிப்போம் என  இல்லாமல்  வெறுப் பேற்றிக்  கொள்ளவா வீட்டிற்கு போவது ? இல்வாழ்வு  கணவனும் மனைவியும் மட்டும் அல்லமால்  அந்த கூட்டுக் குடும்பமே  மகிழ்வை  சந்தித்து  இன்பம் துய்ப்பதாகும்  இப்படி எல்லாம் தமிழ் நாட்டில்  படம் கூட  எடுப்பதில்லை  என்கிறார்கள்  பாவம்  விடுங்கள்   அதற்குதான்  உங்களுக்கான  குடும்பத்திற்கான  ஏற்றதான  மணப்பெண்ணை  தேர்ந்து எடுங்கள்  எல்லா வகையிலும் உங்களுக்கு பேருந்தும் படியான   குடும்பத்தை  உண்டாக்க முயலுங்கள்  இன்று  படித்தது படிகாதது  எல்லாம் பெண்களுமே  எளிமையையும்  முறையான வாழ்வையும்  வாழ்வதில்லை   தெரியவும் இல்லை  இதனால்தான்  மருத்துவத்தை மட்டும் அல்லாது வாழ்வியலையும்  இங்கு பேசுகிறேன் .... போதுமா ?

      உங்களுக்கு ஏற்ற வாழ்வை தேடும் போதுதான்  நோயில்லாத குடும்பத்தை உண்டாக்க இயலும்  உணவுகள் இயற்க்கை   சார்ந்து  சிறுதானியங் களுக்கு முக்கியத்துவம் அளித்து  குடும்பத்து உணவு முறைகளை முறைப் படுத்துங்கள் . நாட்டுப் புற காய்களுக்கு  முக்கியத்துவம்  அளியுங்கள் . உணவில் கீரைகள்  முக்கிய பங்கு வகிக்கட்டும்  இயற்க்கை  சார்ந்த  வாழ்க்கை முறை  நீடிக்கட்டும் . தானியங்கள் , கொட்டைகள்  போன்றவற்றை மிகையாக பயன்படுத்துங்கள் . வாரம் இருநாள்  எண்ணைக்  குளியல் செய்யுங்கள்  உங்களின் உணவில்  எள் , நிலக்கடலை  பேன்றவை  மிகையாக  இருக்கட்டும் .
வாழ்வு  இனிதாகும்  அடுத்த பதிவில்  சற்று விரிவான புள்ளி விவரங்களுடன் ....

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம்


பிழைகள்  மிகுதிக்கு  பொறுத்து அருள்க ...

      
More than a Blog Aggregator

நவம்பர் 26, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் வரிசை 3

     இது தொடராக வரப்போகிறதா இல்லையா என புரிய வில்லை எனக்கு எங்களின் உறவுகளுக்கு சொல்வதற்கு நெறைய இருக்கறது காலச்சூழல்தான் . இல்லைஇன்றைய நிலையில் திருமண வாழ்வை முறையாக அணுகி வாழ்ந்து கட்டுகிறவர்கள் மிகசிலரே . வாழ்கை என்பது கணவனும் மனைவியும் குடும்பமும் சேர்ந்து வாழ்வது எத்தகைய இன்பம் நிறைந்தது .? இதை இந்த மூடத்தனம் நிறைந்த உலகம் புரிந்து கொள்ளவில்லை . கூட்டுக் குடும்ப வாழ்கை முறை நமக்கே யுரிது இன்று ஐரோப்பிய நாடுகளில் இது காணமல் போய் விட்டது சில நாள் களுக்கு முன் ஒரு நீதியரசர் (நீதிபதி இப்படி சொன்னதன புரியும் !) ஒருவர் எரிவளி நிறுவனம் ஒரே குடும்பத்தில் பல இனைப்புகள் உள்ளது எனவே தனியாக அடுப்புகள் இல்லை எனவே ஒன்றுக்கு மேற்ப்பட்ட எரிவளி இணைப்பை துண்டிக்கிறோம் என அறிவித்தமைக்கு கடுமையாக சாடி இன்றைய நிலையில் குடும்பங்கள் சிதறிக்கொண்டு இருக்கிறது இந்த்த சூழலில் ஒற்றுமையாக ஒரு குடும்பம் இருக்கிறது என்றல் பாராட்டாமல் இனைப்பை துண்டிப்பதா என கேட்டு மீண்டும் எரிவளி இனைப்பு கொடுக்க ஆணை பிறப்பித்தது உண்மையில் பாராட்டும் படி இருந்தது .

        இப்படிதத்தானே ஊக்குவிக்க வேண்டும் . உண்மையில் இன்றைய இளசுகள் எதையும் பொறுமையுடன் அணுகுவதில்லை நாம் சொல்லுவது இருபாலரையும்தான். எதிலும் விரைவு விரைவு ... எனவே வாழ்வும் விரைந்து கசந்து விடுகிறது பின்னர் மணமுறிவை நாடி போய் சீரழிகின்றனர் . இதற்கான காரணங்களை கண்டறிந்து சிக்கல்களை தீர்த்துக் கொள்ளுவதில்லை தீர்வு இருக்கிறது என புரிந்து கொள்ளுவதும் இல்லை . குடும்பம் வாழ்க்கை என்பது ஒரு கலையாக எண்ணப் பட வேண்டும் அதைவிடுத்து வரட்டுத் தனமாக வெறும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விட்டில் பூச்சிகளாகி மடிந்து போகின்றனர் ஏன் இப்படி நிகழுகிறது என்பதை சிந்திக்க மறுக்கின்றனர் . இந்த்த வரட்டுத் தனம்தான் மனிதனை சீரழிக்கிறது . இல்வாழ்வை எடுத்துக் கொள்ளுவோம் தாம்பத்திய உறவை வள்ளுவர் மலரினும் மெல்லிது காதல் ... என்கிறார் இன்று கண்மூடித்தனமான பாலுறவுக் காட்ச்சிகளை பார்த்து விட்டு அதை அப்படியே நடைமுறைப் படுத்தத் தொடங்கி விடுகிறார்கள் இதனால் நிலை குலைந்து போன ஆணோ அல்லது பெண்ணோ பாலுறைவே வெறுக்கிறார் அல்லது இல் வாழ்கைகை முறித்துக் கொள்ளவிழைகிறார் . இதுதான் நடைமுறையா என தெரிந்து கொள்ளுவதில்லை இன்று இவர்களின் வழிகாட்டி மட்டரகமான செய்தி ஊடகங்களும் தொலைகாட்சிகளும் தான். காதலை அறிந்து கொள்ள இலக்கியங்களை கற்க வேண்டும் அகநானூறையும் , குருந்தொகையையும் அணு அணுவாக கற்க வேண்டும் குறிப்பாக வள்ளுவத்தை இன்பத்துப் பாலில் கூறியுள்ள எல்லோ பாடல் களையும் இருவரும் சேர்ந்தே வாசிக்க வேண்டும் . அப்போதுதான் காதல் புரியவரும்.

        இல்வாழ்க்கைப் பற்றி ஒரு புரிதல் கிடக்கும் இன்று முதல் இரவிலேயே எல்லாவற்றையும் நுகர்ந்து விட வேண்டும் என எண்ணுகிறார்கள் பழங்காலத்தில் திருமண விழாவே பதினைந்து நாள் களுக்கு மேல் நடக்கும் காரணம் இருவரையும் முறையாக புரிந்து கொள்ள வேண்டும் எனற உயரிய நோக்கம்தான் அன்றி வேறல்ல. சில நண்பர்கள் தங்களது ஆண்மையை நிலை நாட்ட பொது மகளீரை நாடுவதுண்டு இது பணத்திற்கான நடத்தப் படும் ஒரு அழிவு விளையாட்டு அப்படி அவள் நடக்க வில்லை என்றால் அவளுக்கு வருவாய் கிடைக்காது வீட்டில் உள்ளவள் விலை மகளீர் அல்லவே வேண்டும் பொது முறையாக பாலுறவு துய்த்துக் கொள்ளலாமே என் இதை புரிந்து கொள்ளுவதில்லை இது குறித்தான விரிந்த விமர்சனங்கள் வரவேற்க்கப் படுகிறது விமர்சனங்கள் இல்லை எனின் கருத்துகள் இல்லை என இந்த தொடர் நிறைவு அடையும் .

 சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .







           தமிழீழ  போராட்டத்தில்  ஈகா  சாவடைந்த  போராளிகளுக்கு
எமது  இதயம்  கனிந்த  கண்ணீர் அஞ்சலி .




 
More than a Blog Aggregator

நவம்பர் 19, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் -2

ஒரு பொறியாளர் பெங்களூருவில் வசிக்கிறார் நாங்கள் பெரும்பான்மை இப்படித்தான் இருக்கிறோம் அல்லது இருக்கிறார்கள் இதில் இருந்து விடுபட நீங்கள்தான் வழிசொல்ல வேண்டும் . அதை விடுத்து எங்களை சாடுவது சரியில்லை என்கிறார் . உண்மைதான் இந்த சமூகம் மாற்றம் பெற வேண்டும் என என்னும் போது நாம் உடனே பலனை எதிர் பார்க்கிறேன் பலன் இல்லை என்றால் நமது விமர்சனம் தொடருகிறது. முறையில்லாத உணவுப் பழக்கம் முறையில்லாத வாழ்க்கைமுறை இவைகள் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுகிறது . என சான்றுகளுடன் கோரினால் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அங்கு எமது விமர்சனம் தொடருகிறது..... இன்றைய முறையில்லாத உணவுமுறை முறையில்லாத வாழ்க்கைமுறை எல்லாமே கேட்டை செய்யக் கூடியது மயக்கப் பொருட்கள் (குடி,புகை ) இரண்டுமே உடலை அழிக்கக் கூடிய நச்சுகள் தீபாவளிக்கு நாட்டில் மிகவும் பின் தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டம் எட்டு கோடிக்கு மது விற்பனை எனக்கு இவர்களைப் பார்த்து மகிழவா தோணும் ? அதனால் தான் திட்டித் தீர்க்கிறேன் போதுமா நண்பரே . இந்த மயக்கப் பொருட்களினால் விந்தணுக்கள் பாதிக்கப் படுகிறது அடுத்த கட்ட தலைமுறை நோயாளியகித் தானே போகும் . நேரந்தவறிய முறையில்லாத உணவுகள் நோயைத்தனே உண்டாக்கும் ? நீங்கள் நோயாளியாக இருந்தால் மரபு வழியான உங்களின் விந்தணுக்களில் இருந்து உயிர் பெரும் குழந்தைகள் நோயாளியாகிப் போவார்கள் தானே ? நீங்கள் முறையில்லாது விழுங்கப் படும் மேலை நாட்டு மட்டரக உணவு உங்களை நோயாளியகத்தானே செய்யும் எனவே முறையில்லாத தவறான பழக்கங்களை விட்டொழிக்க வேண்டுகிறேன் உணவு முறையில் இயற்கை சார்ந்த உணவு தேவை ஒருவேளை சமைக்கப் படாத உணவாக இருத்தல் மிகவும் நல்லது கரணம் இந்த சமைக்கப் படாத உணவு குருதியை முழு தூய்மையாக்கும் . எனக்கு தேவை எதிர்கால தலைமுறையினர் நோயில்லாத இயற்கை சார்ந்து வாழ வேண்டும் என்பதே எனவே முதலில் உங்களில் இருந்து தொடங்க வேண்டும் என எண்ணுகிறேன் இன்று இயற்கை சார்ந்த உணவுப் பழக்கம் புத்துயிர் பெற்று வருகிறது இதே சிறப்புடன் முன்னெடுக்கும் பொது உண்மையில் அடுத்த சில தலை முறைகளில் பழந்தமிழரின் வாழ்க்கை முறையை கட்டமைத்து விடலாம் இயற்கையை மீட்டெடுத்து விடலாம் . பெண்ணோ அல்லது ஆணோ அழகாக இருக்கிறார்களா என பார்க்க வேண்டாம் உங்களுக்கு ஏற்ற வர்காளாக உங்களின் பழக்க வழக்கங்களுக்கு வாழ்க்கை முறைக்கு ஏற்ற வர்களாக இருக்றார்களா என்பதை கவனியுங்கள் . உங்களின் வாழ்க்கைத்துணை நோயில்லாமல் இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . உங்களின் வாழ்க்கைத்துணை எதிர்காலம் குறித்த எந்த திட்டமிடலை வைத்து இருக்கிறார் என அறிந்து கொள்க . குழந்தைப் பேறு தொடர்பாக என்ன முடிவு எடுத்து உள்ளீர்கள் கொஞ்சம் நாள் கழித்து அல்லது உடனே என்பதை முடிவு செய்க . உங்களின் அகவை குறைந்தது இருபத்தைந்திற்கு மேற்பட்டதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் . உங்களின் பேறு கல மருத்துவ முறை ஆங்கில அல்லது மாற்று மருத்துவமுறை பற்றிய தெளிவான முடிவு செய்க . உங்களின் மருத்துவரை முதலில் முடிவு செய்க . எல்லாவற்றிற்கும் இருவரும் முதலில் ஆற்றுப் படுத்துனர் (கவுன்சிலிங் ) பார்த்து முடிவுகள் செய்க . எதிர்காலம் குறித்து முழுமையான திட்டமிடல்கள் செய்க . அடுத்த இடுகையில் விரிவாக பேசுவோம் .... சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...