டிசம்பர் 16, 2010

வியர்வை நாற்றம் ஒரு தீர்வு




நாற்றம் என்ற சொல்லாடல் பழந்தமிழில் வாசம்(மணம்) என்ற பொருளில் ஆளப்பட்டு வந்திருக்கிறது கற்பூரம் நாறுமோ ... கமலப்பூதான் நாறுமோ ....
எனவே நாற்றம் அதுஓருவகை வாசனை என்று தான் கொள்ள வேண்டும் . உடலில் மெல்லிய வாடை இயற்கைதான் எனலாம் . இருப்பினும் வெறுக்கத்க்க வாடை சற்று சுளிக்க வைக்கவே செய்யும் .

கதைகள் ...

இயற்கையிலேயே பெண்களின் கூந்தலில் வாசம் உண்டா இல்லையா என்ற திருவிளையாடல் கதை
சொல்லும் செய்தியை உங்களிடம் விட்டுவிட்டு , சில ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது என கதைப்போம் . பெண்களின் பூப்பு (மாதவிடாய் ) காலத்தில் ஒருவிதமான வாடை ஏற்படுவதாக குறிப்பிடுகிறது (எமக்கு அதற்க்கான வாய்ப்போ இன்னும் ஏற்ப்படவில்லை என்பது வேறு சேதி ) அது உளவியல் காரணங்களினால் இருக்கலாம் எனகருதுகிறேன் .

உளவியல் ...
பெண்களின் பூப்பு காலம் இப்போதோ கவலையுடன் எதிர்பார்க்கப் படுகிறது அளவுகடந்த வருத்தம் , எரிச்சல் , பதற்டம் போன்ற காரணங்களினால் பலவிதமான இரசாயன மாற்றங்கள் ஏற்ப்படுகிறது என்பது நாம் அறிந்ததுதான் . எனவே பூப்பு கால வாடை உளவியல் காரணங்களினால் ஏற்ப்படலாம் என எண்ணுகிறேன் .
இந்த வியர்வை வாடைகூட ஒருவித இயற்கையின் ஏற்பாடுதான் என்பது எமது எண்ணம் ஒருசில ஆய்வு முடிவுகள் இப்படியம் தெரிவிக்கிறது . அதாவது உடலில் தோன்றும் அந்த வாடை மாற்று பாலினத்தின் மீது ஒருவித ஈர்ப்பை உண்டாக்குகிறது என்கிறது . பல்வேறு ஆய்வுகளை செய்துவிட்டு வியர்வை வாடை எதிர் பாலின ஈர்ப்பை உண்டாக்குகிறது என்பது ஒரு ஆய்வு முடிவு இது சரியானதே எனலாம் .

சித்தர்கள் கோட்பாடு ...

எல்லாவற்றையும் நுணுகி ,நுணுகி ஆய்ந்த சித்தர்கள் இந்த சிக்கலுக்கும் விடை தேடி யுள்ளனர் .
மனித உடலை பல்வேறு வகையில் ஆய்வு செய்து வளி,(வாதம் ) அழல் (பித்தம் ) ஐ (கபம் )என மூன்று
வகையாக வகைப்படுத்தி யுள்ளனர் . அம் மூன்று உடலையும் மும் மூன்றாக்கி ஒன்பது வகையான உடல்வாகு என கணக்கிடுகின்றனர் . வளி (வாத ) உடலில் வியர்வை வாடை பெரும்பாலும் இருப்பதில்லை . அழல் (பித்தம் )மற்றும் ஐ (கபம் ) உடல்வாகு கொண்டவர்கள் வியர்வை வடைக்கு ஆட்படுகின்றனர் . என்பது சித்தர்களின் சித்தாந்தம் .

தீர்வுகள் ...

பெரும்பாலும் எந்த நோய்க்கும் தற்காலிக தீர்வை தேடி ஓடும் காலமிது . இந்த சிக்கல் களுக்கு தெளிப்பான் மருந்துகளை பயன்படுத்துகின்றனர் . இவற்றால் தீங்கு உண்டு என்கின்றனர் .
செரிமான மண்டலங்கள் அழுக்கு அடைந்து கேடு அடைவதால் இக்குற்றம் நிகழுவதாக சொல்கிறது சித்த மருத்துவம் .தீனிப்பை,குடல் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்காமையே இதற்க்கான காரணமாகிறது . எனவே கழிச்சல் மருந்துகளை எடுத்துக்கொண்டு முறைப்படி தூய்மை செய்து கொண்டு எளிமையான உணவுகளை எடுத்துகொள்ள இதிலிருந்து விடுபடலாம் .
௧.சந்தனத்தை அரைத்து தேய்த்து குளிக்கலாம்

௨. தூய சந்தனத்தை அரைத்து நாளும் கொட்டைபாக்கு அளவு உள் அருந்தலாம்

௩. ஆவாரை உண்ண வியர்வை வாடையை கட்டுப்படுத்தும் அவற்றை நாளும் எடுக்கலாம் .

௪. இலுப்பை இலைகளை அரைத்து குளிக்கலாம் . இந்த இலைகளின் சாறு எடுத்து அதேஅளவு நல்லெண்ணை சேர்த்து பதமுற காய்ச்சி தேய்த்து குளிக்கலாம் .

௫. படிகாரத்தை தூளாக்கி தண்ணிரில் குழைத்து குளித்து முடித்து பூசலாம் .
இப்படி எண்ணற்ற மருந்துகள் நம் மண்ணில் விரிந்து கிடக்கிறது .பயன்படுத்துவோம் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம் . அழிவிலிருந்து உலகை காப்போம் More than a Blog Aggregator

9 கருத்துகள்:

  1. மீண்டுமொரு உன்னத பதிவு ..

    நன்றி

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றிங்க....

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் கருத்துகளுக்கும் .
    வருகைக்கும் பாராட்டுகள்
    அரசன்
    அக்கா சித்ரா
    புதிய வருகை
    குறிஞ்சி
    மாதவ சீனிவாச கோபாலன்
    மற்றும்
    கிருட்டிணவேணி
    ஆகியோருக்கு
    வணக்கங்கள் .

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான குறிப்புகள் .....புடம் போட்ட தங்கத்தை போல நாளுக்கு நாள் தங்கள் பதிவுகள் மிளிர ஆரம்பித்துவிட்டது .....படங்கள் மிக அருமை ....தேர்ந்த வலை பதிவராக மாறிவிட்டீர் ......எம் உளம் கனிந்த வாழ்த்துக்கள் .....

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் . பணிகளுக்கிடையே வந்ததற்கு பாராட்டுகள் எல்லாவற்றிக்கும் உங்களது பங்களிப்புதான் காரணம் .

    பதிலளிநீக்கு
  6. சொல்லியிருக்கும் செய்தி நல்லது.செயல்படுத்தத்தான் கஸ்டம்.ஒரு மாத்திரையை விழுங்குவதற்கே நேரமில்லாமல் பறக்கிறோம்..மறக்கிறோம் !

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...