
தலைவலி காரணங்கள்- சில தீர்வுகள்
தலைவலி என்பது ஒரு நோய் இல்லை . அது ஒருநோயின் அறிகுறி எனலாம் .தலைவலிக்கு கரணம் என்ன என்பதை சிந்தித்துக் கொண்டிருக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை . தலைவலிக்கு காரணம்கண்டுபிடித்துக் கொண்டிருப்பதைவிட அதற்கென பெட்டிக்கடையில் விற்கப் படும் எதோ ஒருமாத்திரை வாங்கி விழுங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இதனால் வரும் கேடுகளை சிந்திக்க நேரம் வாய்பதில்லை .
ஒரு நகைச்சுவை
ஒருவர் ; ஏன் அந்தமருத்துவரை பார்த்து ஓடுறீங்க ?
இவர் ; பல்வலின்னு போனேன் பல்ல எடுத்திட்டாரு. மீண்டும் பல்வலி வந்தது மீண்டும் ஒரு பல்லை எடுத்திட்டாரு .இப்ப எனக்கு தலைவலி அதுதான் .
ஒருவர் ; ?????????????????
இது சிரிப்பதற்காக அல்ல . சிந்திப்பதற்காக யாரோ ஒரு நண்பர் எழுதி இருந்தார் எத்தனைபேர் சிந்தித்தார்கள் என்பது தெரியவில்லை . இதில் இரண்டு உள்ளடக்கம் உள்ளது ஒன்று இப்போதெல்லாம் எந்த நோய்க்கும் அறுவை சிகிச்சைதான் தீர்வு என்ற கற்பிதம் . இரண்டாவது நோய்களின் காரணத்திற்கு அல்லாமல் நோய்களுக்கு மருந்து விழுங்குவது . இது எந்த வகையில் சரி என்பது விளங்க வில்லை .
தலைவலிக்கான காரணங்கள்
௧.நீடித்த மலச்சிக்கல் .
௨.நேரம் தவறி உண்பது.
௩.கடுமையான உழைப்பு .
௪.வேண்டிய நீர் அருந்தாமை.
௫.உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம்.
௬.மயக்கப் பொருள் (சாராயம் ,புகை ) பயன் படுத்துதல் .
௭.கடுமையான வெய்யலில் வேலைசெய்தால்.
௮.மழையின் காரணமாக.
௯.உளவியல் காரங்களினால் .சினம் ,எரிச்சல், இறுக்கம் இப்படி...
௧௦.கண்ணிற்கு கடுமையான வேலை கொடுப்பது.
௧௧.இரவு மிகையாக கண்விழித்தல்.
௧௨.இரசாயணம் கலந்த தலைசயம், கலவைகள் பூசுவது.
௧௩.பெண்களின் பூப்பு (மாதவிடாய் )காலத்தில்.
௧௪.வேருநோய் களுக்கு எடுத்துக்கொண்ட இரசாயன மருந்து களினால் .
௧௫.பினிசம் (சைனசு ) நோய்களின் போது.
௧௬.எண்ணெய் கலந்த வறுத்த உணவுகள் மிகையாக எடுத்து கொண்ட போது .
௧௭.உண்ட உணவு செரிமானம் ஆகா நிலையில் .
இப்படி தலை நோய் களுக்கான காரணங்கள் நீளுகிறது அதற்க்கு எதோ ஒரு மாத்திரை எப்படி தீர்வாக இருக்க வியலும் சற்று சிந்திப்போமா?
இந்த காரணங்களை நீக்கி கொண்டாலே நோய் நீங்கிவிடுமே எதோ ஒரு மாத்திரையை விழுங்கி நோயை பெரிது படுத்தி பின்னர் அழுவானேன்?
சில எளிய தீர்வுகள்
மேற்கண்ட காரணங்களினால் வந்த தலைவலி என்றால் அந்த பிழை நீக்குக .
சுக்கை வெந்நீரில் அரைத்து பற்றிடுக.
செரிமானமாகாத நிலை எனில் வயிற்றை பட்டினி பொடுக.
செரிக்க எளிமையான உணவுகள் எடுக்க வேண்டும்.
உளவியல் காரணங்கள் எனில் ஊழ்கத்தில் (தியானத்தில் )ஆழ்க .
காலையில் நாளும் தூய்மையான நீர் அருந்துக.

தமிழ கலைகளை காப்போம் உலகில் உயர்ந்து நிற்ப்போம் .
.
