ஜூன் 11, 2012

பாலுறவு காட்சிகளும் சில ஆய்வுகளும்



       இன்று  எல்லா இடங்களிலும்  நீக்கமற  நிறைந்து கிடக்கறது இந்த  பாலுறவுக் காட்சிகள் . இன்றைய  அறிவியல் எல்லோரது கைகளிலும்   தொழில் நுட்பத்தினால் கைப்பேசிகளில்  தொடங்கி பல்வேறு  தளங்களில்  இந்த அறிவியல் அற்ப்புதங்கள் நிகழுகிறது . வெறுமனே  இந்த பாலுறவுப் படங்களைப்  பார்ப்பதினால் என்ன நேர்ந்துவிடப் போகிறது? சிலருக்கு இந்த எண்ணம் எழலாம்  எழுவது இயல்புதான் . அனால் இதன் கொடுமைகள்  பல்வேறனது .
      மனிதத்தின் சக்திகளை  செலவு செய்வதில் கண்கள் பெரும் பங்கு  வகிக்கிறது என்பது நமக்கு தெரியாத  ஒன்றல்ல . இந்த கண்களின் மூலம்  பெறப்பட்டு  உடலில்  பல்வேறு மாற்றங்களை இந்த பாலுறவுக் காட்சிகள்  அரங்கேற்றுகிறது .அளவிற்கு  மிகையாக பார்க்கப் படும் இந்த  பாலுறவுக் காட்சிகள்  நேரடியான பாலுறவு கொள்வதைவிட  பெரும் தீங்கானது  என்ன பாலுறவு தீங்கானதா? ஆம்  முறைதவறிய பாலுறவு கொடுமையானதே தவறா னதே. .
      இதற்க்கு பல சான்றுகளை  அடுக்கலாம்  இருப்பினும் நாம் அதற்க்கு சான்று தேடி அலையவில்லை.இருப்பினும்  இந்த முறைதவறிய  பாலுறவு வேட்கை  அல்லது பாலுறவு  காட்சி உடலை சூடேற்று கிறது  உடலில் பல்வேறு இரசாயன மாற்றத்தை   நிகழுத்துகிறது  . முறைதவறிய இந்த பெருந்தீங்கு  நீடிக்கிறபோது உடலில் நோயாக பரிமாணம் அடைகிறது . உடலில் சக்தியிழப்பும் ... மிகையனா சூடேற்றமும்  உளவியல் ரீதியான  தடுமாற்றங்களும்  உண்டாக்குகிறது .
        கடந்த  பல  ஆண்டுகளுக்கு  முன்பாக  ஈழத்தில்  நமது கையாலாகாத  நடுவணரசு பாலுறவு  காட்சிகளை  கொண்ட  மேன்தகடுகளை இளஞ் சிறார்களும்  சிறுமிகளும்  இளைஞ்சர்களும்   உள்ள  இடங்களில் வீசி  எரிந்து விட்டு  வந்தது  அதனைக்கண்ட  உண்மையான இளசுகள்  தலைமைக்கு  தகவல் சொல்ல  கடைசி  மேன்தகடுவரை கொண்டுவந்து  அழிக்கப் பட்டது  அனைவரும் அறிந்ததே  காரணம் இந்த குமுகம்  எதற்கும்  பயன் படாமல்  நாடு மொழி  இனம்  என்ற  பற்று இல்லாமல்  இந்த  பாலுறவு  எண்ணத்துடன்  எல்லா நேரங்களிலும்  சுற்றி  திரிந்தால் தானே  கொள்ளையடிப்பவர்கள்  கொள்ளையடித்துக் கொண்டே  இருக்க  இயலும்?
     உண்மையில்  இந்த பாலுறவுக் காட்சிகள்  ஒழுக்கக்  கேடானது மட்டுமல்ல உடலுக்கும் கேடானதே  வேறு எந்த  பணியிலும்  நிலைக்க  செய்யாது.  பாலுறவு  என்பது ஒரு நாளில்  எல்லாவற்றையும் சேர்த்து   முப்பது  நிமிடங்களில்  முடிந்து போகிற செய்தி  ஆனால்  இதையே  வீணாக  நாள் முழுவதும்  இந்த எண்ணத்துடன்  இருப்பது  இந்த குமுகத்தை சீரழிப்பதாக அமையாதா? உழைப்பை செலுத்தி  முறையாக நமது வீணாக கடக்கும் நிலத்தைக் கொத்தினால் நல்ல விளைச்சல்  கிட்டும் தானே ? தனிமனித  வாழ்வில் நேரத்தை முறையாக செலவிட்டால்  இந்த பேரண்டமே மகிழ்ச்சியில்  இருக்கும் தானே மகத்தான  மனித  சக்தியை  உற்பத்தில் செலவிடுவோம்  உலகினில் உயர்ந்து நிற்ப்போம்.
சித்த மருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...