நவம்பர் 04, 2010

அந்த மூன்று நாட்கள் .


அந்த மூன்று நாட்கள் .
மாறிவரும்
சூழலில் நோய்கள் எளிமையாகிப் போனது . இந்த நோய்கள்
எல்லாமே இயல்பானவை என எண்ணம் கொண்டு நோயை சுமப்பதை இனிமையாக கருதுகின்றார்கள் போலும் . இன்று நல்ல மனிதர்கள் அருகிப்போனத்தால் கல்லிடம் முறையிடும் வழக்கம் அதிகரித்துப் போனது .
அறிவுத்துறையினர் தம் வழித்தடத்தை மாற்றிக்கொண்டு விட்ட படியால் பூசையடிகள் பூரித்துப் போகிறனர் .

முறை இல்லாத உணவுகள் பல நோய்களை உண்டக்குக்வது போலவே பெண்களின் தாய்மையின் சுமையும் கூட்டி பெண்மையை படாத படு படுத்துகிறது . பழங்காலங்களில் தாய்மையை வளர்க்க பெரிதும் உணவுமுறைகள் காரணமாக இருந்தது . அதனால் தான் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றும் நூறாண்டு நலமேடு வாழ்ந்தனர் . இன்று அப்படி எல்லாம் இருக்கவில்லை . மிகவும் இளைய வயதில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் படாத பாடுபடுவதனை தாய்கள் வேதனைப்பட்டு அதை தவிர்க்க முடியாது என்று குழந்தைகளை ஆற்றுப் படுத்துகின்றனர் .
அந்தமூன்று நாட்கள் சுமையானவைதனா ?

பழங்கால உணவுமுறை இரசாயன கலப்பில்லாத இயற்கையோடு இணைந்த உணவுமுறைகள் . இன்றைய பரப்பான வாழ்க்கை முறை கட்டுப்பாடில்லாத உணவு முறையினை கொண்டதாக இருக்கிறது . அளவிற்கதிகமான . மென் குடிநீர் , குளம்பி(காபி ) கோக் , கலந்த உணவுகள் அளவிற்கு அதிகமான கொழுப்பு உணவுகள் . உணர்வுகளை கிளர்ந்து எழச்செய்யும் படக்கசிகள் போன்றவை நோவை வளர்க்கிறது . இது பெண்களுக்கு தெரிவதில்லை கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்கு குடிநீர் குடிப்பதைபோல ஊசி போட்டு நோவை பெரிதாக்கு கின்றனர் .
குழந்தை களுக்கு இளமையிலேயே எலும்புகளை வளப்படுத்தும் உணவுகளை கொடுக்கவேண்டும் . எள், வெல்லம், உளுந்து , போன்றவை கொடுக்க வேண்டும் . வாரம் இரண்டுநாள் எண்ணெய்க் குளியல் . செய்யவேண்டும் .பரபரப்பையும் அமைதி இன்மையும் நீக்கிக் கொண்டு எரியோம்ம்பல் (ஆசனபயிற்சி ) செய்து உடலையும் மனதையும் அமைதியாக்கிக் கொள்ள வேண்டும் . முறையில்லாத உணவுகளை விட்டு ஒழித்து கீரைகள் , காய்கள் , பழங்கள் அதிகமாக எடுக்க வேண்டும் .
வீட்டு விலக்கு நாட்களில் கடுமையான வலி சோர்வு தலைவலி போன்றவை இருப்பின் இயற்கையான முறையான உணவுகளை எடுக்கவேண்டும் . கடுமையான வலி இருப்பின் முருங்கைகீரை சாறு 25மிலி சிறிது பெருங்காயம் போட்டு தேவையான அளவு உப்பு கலந்து குடிக்க வலி நிற்கும் . தொடர்ந்து வலி இருப்பவர்கள் வீட்டு விலக்கு வரும்மூன்று நாட்களுக்குமுன்பே நாளும் மேற்கண்ட மருந்தை அருந்த நல்ல பலனை காணலாம் ....
அடுத்து


முறையற்ற வீட்டு விலக்கு ....
அதிக இரத்தப்போக்கு .....
மேலும் வீட்டு விலக்கு சிக்கல்கள் ......
உங்களின் கேள்வி கணைகளோடு ....

தொடர்வோமா ......More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...