நவம்பர் 02, 2010

அச்சப்பட்டே சாவானேன்......
வரட்டுத்தனமான கோட்பாடுகளையும் குருட்டுத்தனமான சிந்தனைகளையும்
கொண்டிருப்பதையும் அதை மக்கள் மீது திணிப்பதையும் . விரும்பாதவன் நான் .
எதாவது ஒரு கருத்து பகிரப்பட்டால் அது இந்த மக்கள் கூட்டத்திற்கு நன்மையே செய்வதாக இருக்கவேண்டும் என எண்ணுபவன் நாம் .
நண்பர்கள் இருவர் பேசிக்கொள்வதை தற்செயலாக கேட்க நேர்ந்தது அது மருத்துவம் தொடர்பாக இருக்கவே நாம் காதுகளை தீட்டிக் கொண்டோம் .நண்பர்களில் ஒருவருக்கு சாதாரண கட்டி அதாவது கொழுப்புக் கட்டி என்று மருத்துவ உலகம் அதை அழைக்கும் அந்த கட்டி வந்த நண்பர் ஒருமருத்துவரிடம்
சென்று வுள்ளார் மருத்துவரோ அச்சப்பட தேவையில்லை என சிலமருந்துகளை கொடுத்து அனுப்பியுள்ளார் .ஆங்கிலமருத்துவர்களில் உள்ள நேர்மையான மருத்துவர் போலும் எதாவது சிக்கல் இருந்தாலும் வளர்ச்சி இருந்தாலும் வர சொல்லி அனுப்பி வுள்ளார் . ஆனால் வீட்டிற்கு வந்ததும் தான் அவருக்கு சிக்கலே தொடங்கியது எனலாம் . வீட்டிற்கு வந்ததும் பக்கத்து வீடு ,எதிர்வீடு , தெரிந்தவர்கள் என அவரரவர்களுக்கு தோன்றியதெல்லாம் சொல்லி குழப்பியுள்ளனர் . இவரும்குழம்பித்தான் போனாராம் . அதைத்தான் நண்பர்களிடம் கதைத்துக்கொண்டிருகிறார் .
ஒரு அறிஞரிடம் மற்றொருவர் சொன்னாரம் ஐயா இவர் ஒரு செய்தியை மூன்று கோணத்தில் சிந்திப்பார் அவரிடம் பேசுங்கள் என்றதற்கு முதல் அறிஞர் சொன்னாரம் தேவையில்லை ஏன் என்றால் நான் குழப்ப வாதிகளிடம் பேசுவதில்லை என்றாராம் . எதற்க்கு இதை இங்கு சொல்கிறேன் என்றால் ஒரு செய்தியை இரண்டு கோணத்தில் சிந்திப்பது தான் சிறந்தது . ஒன்று நன்மை மற்றது தீமை தேவையில்லாமல் மூன்றாவது கோணத்தில் சிந்திப்பதால் மனிதன் குழப்ப வதியவன் என்பது உண்மையன்றோ ?
நண்பர்களில் ஒருவருக்கு கட்டிவந்தது ஒன்று . மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் இல்லைஎன்றால் அறுவை சிகிச்சை செய்து கொண்டுவிட்டு போகவேண்டியதுதானே ? அதைவிட்டு தானும் குழம்ம்பி மற்றவர்களையும் குழப்பி என்ன அறியாமை அறுவை செய்து கொள்ள சொன்னாரம் ஒருமருத்துவர் அவருக்கு தமிழே தெரியாதாம். மருந்து தந்து அச்சப்படதேவை இல்லை என்ற தமிழ் பேசும் மருத்துவர் மீது நம்பிக்கை இல்லை காரணம் அவர் எளிமையானவர் அதே சமயம் நேர்மையானவர் . அதுதான் அறியாமையில் உள்ளவர்களுக்கு தெரியாதே .
எந்த நோய்க்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்பது சித்தமருத்துவம் . முறையான மருந்து உண்டுவந்தால் எல்லா நோய்களையும் நீக்கிக் கொள்லாம். மருத்துவம் தொடர்பாக செல்லும் முன்பாக எந்த மருத்துவம் சிறந்தது எந்தமருத்துவர் சிறந்தவர் என்பதை எல்லா வகையிலும் பேசி சிந்தித்து அதில் உள்ள நன்மை தீமை எல்லாவற்றையும் ஆய்வு செய்க .
மற்றவர்களின் வீண் தலையீடு களை அனுமதிக்க வேண்டாம் . அதேபோல
மருந்தளுனரை மருத்துவராக ஆக்கும் பழக்கமும் காணப்படுகிறது .
எந்தநோயும் நோய் அல்ல நோய்களுக்கான தொடக்கம் . கண்டபடி தானே மருந்து வங்கி நோயை பெரிதாக்கிக் கொள்வதையும் தவிர்க்கலாம் . சாதாரண எந்த வலியும் இல்லாத வளர்ச்சியும் இல்லாத கட்டிகளை கண்டு அச்சப்படுவனேன் .
சித்த மருத்துவம் காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...