செப்டம்பர் 24, 2012

தமிழன் நோய் நீங்கி நீடுவாழ



     வள்ளுவன் என்ற  பெயரினால் ஆன  பதிவர்  இப்படி கூறுகிறார் . உலகிற்கே அறிவியலையும் நாகரீகத்தையும் வழங்கிய தமிழ  சமூகம்  இன்று நோயாளியகிக்  கொண்டு  இருப்பதைப்  பார்த்தால்  வயிறு  பற்றி எரிகிறது  அதற்கும் ஒரு மருந்து சொல்லுங்கள்  என கேட்டு இருந்தார் .

       உண்மைதான் நண்பரே  உங்களின் பெயரே  உங்களைக் காட்டிவிடுகிறது  சிறந்த தழிர்களின்  ஆசானின் பெயரைத் தாங்கி  இருக்கிறீர்கள் பாராட்டுகள். உண்மையில்  தமிழரின் நோய்க்கு  அடிப்படைக் காரணம்  தமிழனை  தமிழனே  மதிப்பதில்லை . தமிழ கலைகளை  போற்றி பாதுகாப்பதில்லை.  தமிழ  கலைகளை  செய்கிறவர்களை  ஆதரிப்பதில்லை  இதனால்  தமிழன்  நோயாளியாகிப்  போனான்  போய்கொண்டு  இருக்கிறான் .இது வள்ளுவர் காலத்திலேயே  தொடங்கி விட்டது தான்  என்றாலும்  இப்போது தமிழன்  நிலை  மரணத்தின் பிடியில்...  இப்போதாகிலும் விழித்தால் நலம் பெறலாம் . ஒன்றுமில்லை .... தமிழ  கலைகளையும்  தமிழையும்  தமிழ அறிஞ்சர்  களையும்  காப்பது போற்றுவது  பாதுகாப்பது .... தமிழன்  ஓரணியில் திரளுவது ... தமிழன் உலகெங்கும்  தாக்கப் பட்டால்  குரல் கொடுப்பது...  என சூடு  சொரணை பெற்றுவிட்டாலே  தமிழன்  உலகின் உச்சத்திக்கு சென்று விடுவான்  அந்நியன் காலை நக்கும் தமிழன்  சிந்திப்பான் என எண்ணுவோம் .

        உலகின் உயர்ந்த மருத்துவம்  புதையலாக  நம் மண்ணில் சிறப்புகளைக் கொட்டிக் கிடைக்கிறது . தமிழனோ   அறியாமையில் வீழ்ந்து கிடக்கறான்

                                   சிறந்த மருந்து  குங்கிலியம்  அறிவோம் .

      தமிழ  மருத்துவத்தில் மிகசிறந்த மா மருந்து குங்கிலியம் இது ஒருவகை மரத்தின் பிசின் இந்த மரத்துக்கு கருமருது என பெயர்  இந்தவகை மரங்கள்  நிறைய உண்டு  எனினும் வெள்ளை ,சிவப்பு என இரண்டு வகை மட்டுமே சிறப்புவாய்ந்த வையாக கருதப்படுகிறது பூனைக்கண்  குங்கிலியம்  என்ற ஒரு சாதியும் உண்டு.
இது ...
வேப்பமுண்டாக்குதல்
கொழயகற்றுதல்
 ஆகியவை குங்கிலியத்தின் சிறப்புகள் ஆகும்.
தந்திமேகம்
சீழ்விரணம்
எலும்பைப் பற்றிய விரணம்  ஆகியவற்றைப் போக்கும் குணம் இதற்க்கு உண்டு .
வெட்டையால் பிறந்த நாளப் புண்
கொப்பூழ் விரணம்
சீழ்மேகம்
உள்மூல விரணம்
ஆகியவற்றைப் போக்கும்
கருமை , செம்மை  எண்ணும் இருவித குங்கிலியத்தால் காது, உதடு நாசி முதலிய இடங்களில் உண்டாகும் நோய்கள் மேகப் புண்  கட்டிவாதவிருத்தி  சூலை , கிராணி , கானாவிடம் , கீல்பிடிப்பு  நீங்கும் .நகங்களைப் பற்றிய  இரணம்  நீங்கும்.


காததர நாசிநோய் கட்டிக்கடி  மேகப்புண்
வாதவித்தி ரஞ்ச்சூளை வந்குனகம் - ஒதியிலைத்
திக்கி லிருக்த்  திடமுள்ள  வேவுபயக்
குகளி ருக்கனமக்  குள்.      ( தேரையர்  குணபாடம்  )


குங்கிலியத்தை  முறைப்படி உண்டுவர  ஆண்மை பெருகும்  உடல்  குளிரும்..

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம்.
 
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...