இன்று சித்த மருத்துவம் உலகின் உன்னதமான சிறந்த மருத்துவ முறையாக இருப்பதற்கு காரணம் அதன் மருத்துவ குணங்கள் நிறைந்த எளிமையான உணவுப் பொருளே மருந்தாக இருப்பதுதான் மற்ற மருத்துவ முறைகள் இங்கனம் இருக்கவில்லை . எந்த பின்விளைவையும் தராத இந்த மருத்துவ மூலப் பொருட்கள் எளிமையாக கிடைப்பதுடன் நோவை விரைந்து நீக்குகிறது உடலை உரமாக்குகிறது இந்த சொல்லுக்கு இலக்கண மானது கடுக்காயும் ஒன்று காரணம் எண்ணிலடங்கா அதன் மருத்துவ குணங்களும் அதன் தன்மையும்தான் . இந்த கடுக்காய் காய கல்ப வகையை சேர்ந்தது என்பது நாம் அறியாத ஒன்றல்ல .
கடுக்காய் என்ன என்ன நோய்களை நீக்கும் ? சற்று சிந்திப்போமா?
நீரிழிவு
இதயநோய்
இரத்த பித்தம்
இடிபட்ட புண்
காசம்
அபசுமரம்
உதாவர்த்த வாதம்
வாதம்
உதட்டு நோய்
கிரகினி
ஊருச்தம்பம்
கண்நோய்கள்
காமாலை
குண்மம்
குட்டம்
கைகால் எரிச்சல்
கோழை உர்த்தல்
சலக்கட்டு
சித்த பிரமை
தலைநோய்கள்
சுவாசம்
சோபை
மூச்சு வாங்கல்
நாவறட்சி
பல்நோய்கள்
தொண்டைக்கம்மல்
பெருவயிறு
பாண்டு . இரத்தமின்மை
மார்பு நோய்
நீரிழிவு
மலபந்தம்
வயிற்றுப் பொருமல்
வயிற்றுவலி
வாதரத்தம்
வாய் நீர்ச்சுரத்தல்
வாந்தி
விக்கல்
காயம் படல்
விதைவாதம்
வெண்குட்டம்
விடசுரம்
நீண்டநாள் சுரம்
சூலை நோய்
விந்து தடைபடல்
செரியாமை
உழலை
நினைவு மறதி
இருமல்
இளைப்பு
உள்ளங்கால் எரிவு
உட்சூடு
மண்டைப் புற்று
மண்டைக் கிரந்தி
என பல நோய்களை நீக்குகிறது . தாயானவள் அறுசுவை ஊட்டி சேயைத் தேற்றுவாள் .கடுக்காய் உடற் பிணிகளை நீக்கி உடலைத் தேற்றும் . பிணிகள் நீங்கினால் தான் உடல்உட்கொள்ளும் உணவி னை பயன் பாட்டுக்கு கொண்டுவந்து உடலைத் தேற்றும் .எனவேதாம் கடுக்காய் தாயினும் சிறந்தது என சித்த மருத்துவம் கூறுகிறது.
இதன் மருத்துவ குணங்கள் மருத்துவரின் துணையுன் முறைய கொள்ளும் போதுதான் நல்ல பலனைத் தந்து நோயை விடுவிக்கும் .
கடுக்கயுந் தாயுந் கருதிலோன்றான் தானும்
கடுக்கேத் தாய்கங் காண்நீ - கடுக்காய் நோய்
ஒட்டி உடற்றேட்டும் உற்ற அன்னை யேசுவைகள்
ஊட்டிஉடற் றேற்று முவந்து .
என பதிவு செய்கிறார்கள் நம் அறிவு சித்தர்கள் .
சித்த மருத்துவத்தை பயன் படுத்தி நோய் வெல்வோம் சித்த மருத்துவத்தை காப்போம் .
