மனிதனின் சிறுகுடலும் , பெருங்குடலும் இணைகிற இடத்தில் இருக்கும் சிறிய வால் போன்றபகுதி (APPENDIX) எனப்படுகிறது .
நோய்க்குறிகள்
வயிற்றின் நடுபக்கத்தில் வலிதோன்றும். முறையே கிழ்நோக்கி நோய் நகரும் . வயிற்றில் ஒருவித சிக்கல் நீடிக்கும் செரியாமை , மலசிக்கல் , தோன்றலாம் காய்ச்சல் 100 -120 டிகிரியில் தொடரும் வயிற்றில் வலது பக்கம் இருகும் விதை விரைப்படையும் . இருமல் , தும்மல் நோவை அதிகமாகும் .
உளவாற்றல்
பொதுவாக நோய்கண்டவர் நல்ல உளவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் . ஏனெனில் அளவிற்கதிகமான கவலைகளை வைத்துக்கொண்டால் மனிதனை நோய் அழித்துவிடும் . உளம் இறுகினால்,நோய் தீவிரம் அடையும் .திடமான உளவற்றலை வளர்க்கும் போது உடலின் செல்கள் புத்துயிர் பெற்று உடல் சீரடையும் .
அழற்சி அடைதல்
குறிப்பாக உடலின் ஒரு உறுப்புக்கு கடினமான பணி கொடுக்கும் போது அது கேடடைகிறது . தமிழ மருத்துவமான சித்தமருத்துவம் குடலை கழுவி உடலைவளர் என்கிறது . தேரையர் என்ற சித்தர்
மனிதன் நோயின்றி வாழும் நெறியை போதிக்கிறார் . இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிந்துவெளி நாகரீக காலத்திலேயே தோற்றம் கொண்ட நம் மருத்துவ முறை அறிவியலை உள்ளடக்கி அறிவியலை போதிக்கிறது .
மலசிக்கல் நோய்க்கு காரணி
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் (குறள் 942 )
முன்பு உண்ட உணவு நன்கு செரித்த தன்மையை அறிந்து பின் முறைப்படி பசித்தபின் முறையான உணவை முறையான நேரத்தில் உண்ண வேண்டும் என போதிக்கிறது . இந்த முறையில் மாறுபாடு நேருகிறபோது நோய் தோற்றம் கொள்ளுகிறது . நன்கு செரித்து பசித்து சிக்கலின்றி மலம் வெளியேறினால் நோயில்லை . இதில் எங்கோ தடை ஏற்ப்படும் போது நோய் தோற்றம் கொள்ளுகிறது . முக்கி முக்கி கழிவை வெளியேற்ற முயற்சி நாளும் செய்யும் போது குடல் வால் அழற்சி உட்பட பல நோய்களுக்கு காரணமாகிறது .
தீர்வுகள்
௧. ஒய்வு தேவை
௨. பட்டினி பெருமருந்து என்பார்கள் இந்நோய்க்கு முதலில் பட்டினியே பெருமருந்தாகும் .
௩. குடல் பகுதிகளின் தூய்மையாக்கி கொள்ளவேண்டும் . இதற்க்கு எனிமா சிறந்தது .
௪. பின் வெறுமனே நீரைமட்டுமே உணவாக கொள்ள வேண்டும் .
௫. பின்னர் பழச்சாறுகளை மட்டுமே உணவாக கொள்ளவேண்டும் .
குறிப்பாக செம்முள்ளி (கேரட் )சாறு, பீட்ரூட் சாறு , வெள்ளரி சாறு நல்ல மருந்தே .
வெந்தயம் நினைய வைத்த நீரை அருந்தலாம் .
இக்காலத்தே மலசிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் .
இவைகளை தேர்ந்த மருத்துவர் மேற்பார்வையில் செய்க
நோய் நீங்கி வெல்க .
Very informative. Thank you.
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்..புள்ளிகளுக்கு தமிழ் எண்ணுருக்களை பயன்படுத்தியது அழகு...
பதிலளிநீக்குதொடர் வருகைக்கு நன்றிகள் பரட்டுகக்கள் கருத்துகள் தொடர்ந்து சொல்லுங்கள்
பதிலளிநீக்குவிளக்கம் வேண்டுமெனின் தெரிவிக்கலாம் .
Thanx for stopping by..
பதிலளிநீக்குReally informative space you have...very useful article..Thanx for sharing..!
Tasty Appetite
மிகவும் பயனுள்ள தகவல்கள்
பதிலளிநீக்குநன்றி
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள் . பொதுவாக உண்மையில் மக்கள் நலனிற்காக மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்கு பதிவு செய்ய படுகிறது .
பதிலளிநீக்குகுறைகளும் , பயன்பட்டுத்துவதில் சிரமங்கள் இருப்பின் தெரிவிக்கலாம் .
தமிழன்புடன் ....
நல்ல பதிவுகள் நிறைய உள்ளன..
பதிலளிநீக்குதங்களின் இந்த உயர்ந்த இப்பணி மென்மேலும் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
what theriyar said.. give the ref also..I expecting more from you
பதிலளிநீக்குநிறைவான பிரயோசனாமான பதிவுகள்.தொடர்வோம் !
பதிலளிநீக்குவருகைக்கு பாராட்டுகள் . சித்தமருத்துவம் இன்றைய மக்களிடம் குறிப்பாக இளைய தலை முறைக்கு
பதிலளிநீக்குகொண்டு சேர்ப்பதே எமது முகாமையான பணி எனவே தொடர்ந்து வருகைதருவது மட்டுமல்லாமல் .மற்றவர்களுக்கும் அறிமுகப் படுத்துவீர்கள் என்பதே எமது அவா.
anbulla iyya,
பதிலளிநீக்குI am Hepatitis-B patient.viral laod-2000.
please suggest me medicine in sidda.
please.
my e-mail ID is mari22@rediffmail.com
பயனுள்ள குறிப்புகள், நன்றி, பாராட்டுக்கள்!
பதிலளிநீக்கு//குறிப்பாக செம்முள்ளி (கேரட் )சாறு, பீட்ரூட் சாறு , வெள்ளரி சாறு நல்ல மருந்தே .//
கேரட் என்பதை 'செம்முள்ளி' என தமிழில் அழைக்கலாம் என்பதை
அறிந்து கொண்டேன்.
நன்றி நண்பர்களே வருகைக்கு பாராட்டுகள்
பதிலளிநீக்கு