செப்டம்பர் 27, 2010

இன்றே செய்வோம்

இன்றே  செய்வோம்
வாழ்வை வளம் செய்வோம்  
நோய்க்கு  விடைகொடுப்போம் 
இலக்கை அடைந்திடுவோம் 
இன்பமே வாழ்ந்திடுவோம் . 

நோய்க்கு   காரணமாம்...
முறையற்ற  உணவுகளும் ..
தூய்மை  இலா உயிர்வளியும் .
மசான குடிநீரும் ..

பரபரப்பும்  ஆத்திரமும் ...
நோய்களை  கூட்டு  திங்கே

நீரை  உண் ...
உணவைக்குடி   நம்மவர்
கண்ட  கோட்பாடு


வெண்மை  நிற  நஞ்சாமே...
உப்பும்  சர்க்கரையும் ..
மட்டை  தீட்டிய  அரிசியும் .


சின்னத்திரை  சீரழிவும் ..
பெரியதிரை  பேரழிவும்
முட்டாளாய்  ஆக்குதிங்கே...

மயக்கம் தரும் ...
குடியும்  புகையும் ...
நமக்கெதற்கு ?

இன்றே  தொடங்கிடுவோம் ..
ஏற்றம்  தரும் 
நாம்  மருத்துவத்தை ..
சித்தமருத்துவத்தை ...
வீட்டில்  புகுத்திடுவோம் ..
 

More than a Blog Aggregator

செப்டம்பர் 25, 2010

கொசுவிரட்டி ஒரு எச்சரிக்கை

                         இப்போது  எல்லாம்  கொசுவை  விரட்டுவதற்கு  என்றே  பலநிறுவனங்கள்  பலவகையில்   கொசுவர்த்திகளை  உற்பத்தி  செய்கிறது . இவைகள்  உடல்நலனிற்கு  கேடானது  என்பது  பலருக்கு  தெரிவதில்லை  இதனால்  பலநோய்கள்  தோற்றம்  கொள்ளுகிறது . கொசுவர்த்திகளிலும் , மேட் களிலும் பலவகையில்  விற்ப்பனைக்கு வருகிறது . இவற்றில் எல்லாம் இரசாயனங்கள்  கலக்கப்பட்டே உற்பத்தி  செய்யப்படுகிறது .இந்த  இரசாயனங்களின்  அடர்த்தி  இக்காற்றை  நாம் சுவாசிக்கும்  போது    பலவிதமான  மூச்சு  சம்மந்தமான  நோய்கள்  தோற்றம்  கொள்ளுகிறது
      
   இந்த  சுழலில்  நாம்  அறையில்  வைக்கப்படும்  கொசுவர்த்திகள்  மூச்சு குழலை .  பாதிக்கிறது. மூச்சுக்காற்றின்  வழியாக  நச்சு  உள்சென்று  நுரையீரல் , இதயம்  போன்ற  இடங்களில்  பாதிப்புகளை உண்டாக்குகிறது . தேவைன்றி  உள் செல்லும்  இந்த நச்சு காற்று   நீர்க்கோவை , சளி , காய்சல் போன்றவை  ஏறப்படுகிறது .சிலருக்கு  மூக்குநாள அழற்சி  தோன்றுகிறது . இதனால்  சிலருக்கு  ஒவ்வாமை  ஏற்பட்டு விடுகிறது. அத்துடன் பல பாதிப்புகளை உடல் ஏற்கிறது
   
     கொசுவை விரட்டுவதற்காக தொடர்ந்து ஒருவர் கொசுவர்த்தி சுருள், மேட்  ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால் நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவு உரிய காற்றை எடுத்து  கொள்ள இயலாமல் போய் விட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கொசுவர்த்திகளினால் வரும் காற்றை பிறந்த குழந்தைகள் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படுவதாக லக்னோ பல்கலை கழக ஆய்வு எச்சரிக்கறது. மும்பையில் நடத்தப்பட்ட ஆய்வில் கொசு விரட்டிகளை ஓட்ட பயன்படுத்தப்படும் ரசாயனம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது. என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கொசு விரட்டியில்லுள்ள ட்யேக்சின் புற்றுநோயை உண்டாக்ககூடியது. அலேத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்லமெல்ல குறைக்கும் தன்மை உடையது என்கிறார்கள்.

    இவற்றிலிருந்து தப்பிப்பது இயற்கையான ரசாயன கல்லப்பில்லாத மூலிகைகளை கொண்டு செய்யப்பட்டதான கொசுவர்திகளை பயன்படுத்துவதும் கொசுவலைகளை பயன்படுத்துவதும்   தீர்வாக அமையும்.          More than a Blog Aggregator

செப்டம்பர் 23, 2010

உளவியலும் நோயும்

உளவியலும் ...
காரணமாம் .... நோய்களை ..
கூவி  அழைத்திடவே .


எரிச்சல்  தொடர்ந்திடவே ...
எரிந்தது  விடும்
அடிவயிறும் ...
வாயில்  நீரூறும்
இரைபையும்  குடல்கலுமே
புண்ணே  தோற்றம்
கொள்ளும் .

கண்கள்  சிவந்திடவே ...
பரபரப்பு  கொண்டால்தான் ...
இதயம்  பழுதடையும்
எகிறிவிடும்  குருதியழுத்தம்
இதயம்  கேடுவாணேன்...
சினத்தை  விட்டூழிப்போம் .

அச்சம்  தொடர்ந்திடத்தான்...
மூத்திர  காய்களும்
பழுதடையும் ...
அச்சம்  அழித்திட்டால்...
வாழ்வும்  நமதாகும் .

பிணிக்கு  காரணமாம் ...
உளவியலே  என்பதனை ...
கண்டவர்  சித்தர்கள்தான் .

திருமுலரும்...
வள்ளுவரும்  சொல்லாத ...
உளவியலா ?
அறிவியல்  புதுமைகளை
அடுக்கி  காட்டியதை
ஏன்மறந்தீர் ?
பெருமை  பேசவில்லை ...
உரிமை  கொள்ளாமல்
விலங்காய் வாழ்வதுவும்  ஏன் ?
தமிழனே  இப்படித்தான்
விழுந்தது  கிடப்பானோ ?
அடிமை போதுமடா?
விழித்து எழுவதெப்போ ?

எம்மின  மக்களெல்லாம்
அழுவது  கேட்கலையோ ?
சாவது  ஒருநாள்தான்
வரலாற்றில்  நின்றுவிட
வழிஏதும்  கிடைக்கலையோ ?

கண்களை  அழித்துக்கொண்டு ...
கைத்தடியினை  தேடுவதேன் ?
மண்டியிட்டு  வாழ்வதைவிட ...
சாவது  நலனன்றோ ?
சுவற்றை  அழித்துவிட்டு
ஓவியம்  தீட்டலமோ ?

நாம் ...
முன்னவர்  கண்டதை
விட்டுவிட்டு
புரட்டுகின்றீர்....
மருட்டுகின்ற
மருத்துவத்தை ...

தமிழர்  செழித்திடதன் ..
உலகும்  செழித்து நிற்கும் .
உலகோர்  நோய்
நீங்கிடத்தான்
ஏற்றம்பெற  மருத்துவத்தை ...
மாற்றம் இன்றி  ஏற்றுக்கொள் ..
உணர்வு  கொண்டிங்கே
தமிழம்  எங்கும்
வாழட்டும்
நோய்வென்று
நீடுவழ்வோம் .....More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...