செப்டம்பர் 23, 2010

உளவியலும் நோயும்

உளவியலும் ...
காரணமாம் .... நோய்களை ..
கூவி  அழைத்திடவே .


எரிச்சல்  தொடர்ந்திடவே ...
எரிந்தது  விடும்
அடிவயிறும் ...
வாயில்  நீரூறும்
இரைபையும்  குடல்கலுமே
புண்ணே  தோற்றம்
கொள்ளும் .

கண்கள்  சிவந்திடவே ...
பரபரப்பு  கொண்டால்தான் ...
இதயம்  பழுதடையும்
எகிறிவிடும்  குருதியழுத்தம்
இதயம்  கேடுவாணேன்...
சினத்தை  விட்டூழிப்போம் .

அச்சம்  தொடர்ந்திடத்தான்...
மூத்திர  காய்களும்
பழுதடையும் ...
அச்சம்  அழித்திட்டால்...
வாழ்வும்  நமதாகும் .

பிணிக்கு  காரணமாம் ...
உளவியலே  என்பதனை ...
கண்டவர்  சித்தர்கள்தான் .

திருமுலரும்...
வள்ளுவரும்  சொல்லாத ...
உளவியலா ?
அறிவியல்  புதுமைகளை
அடுக்கி  காட்டியதை
ஏன்மறந்தீர் ?
பெருமை  பேசவில்லை ...
உரிமை  கொள்ளாமல்
விலங்காய் வாழ்வதுவும்  ஏன் ?
தமிழனே  இப்படித்தான்
விழுந்தது  கிடப்பானோ ?
அடிமை போதுமடா?
விழித்து எழுவதெப்போ ?

எம்மின  மக்களெல்லாம்
அழுவது  கேட்கலையோ ?
சாவது  ஒருநாள்தான்
வரலாற்றில்  நின்றுவிட
வழிஏதும்  கிடைக்கலையோ ?

கண்களை  அழித்துக்கொண்டு ...
கைத்தடியினை  தேடுவதேன் ?
மண்டியிட்டு  வாழ்வதைவிட ...
சாவது  நலனன்றோ ?
சுவற்றை  அழித்துவிட்டு
ஓவியம்  தீட்டலமோ ?

நாம் ...
முன்னவர்  கண்டதை
விட்டுவிட்டு
புரட்டுகின்றீர்....
மருட்டுகின்ற
மருத்துவத்தை ...

தமிழர்  செழித்திடதன் ..
உலகும்  செழித்து நிற்கும் .
உலகோர்  நோய்
நீங்கிடத்தான்
ஏற்றம்பெற  மருத்துவத்தை ...
மாற்றம் இன்றி  ஏற்றுக்கொள் ..
உணர்வு  கொண்டிங்கே
தமிழம்  எங்கும்
வாழட்டும்
நோய்வென்று
நீடுவழ்வோம் .....More than a Blog Aggregator

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...