இந்த சுழலில் நாம் அறையில் வைக்கப்படும் கொசுவர்த்திகள் மூச்சு குழலை . பாதிக்கிறது. மூச்சுக்காற்றின் வழியாக நச்சு உள்சென்று நுரையீரல் , இதயம் போன்ற இடங்களில் பாதிப்புகளை உண்டாக்குகிறது . தேவைன்றி உள் செல்லும் இந்த நச்சு காற்று நீர்க்கோவை , சளி , காய்சல் போன்றவை ஏறப்படுகிறது .சிலருக்கு மூக்குநாள அழற்சி தோன்றுகிறது . இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு விடுகிறது. அத்துடன் பல பாதிப்புகளை உடல் ஏற்கிறது
கொசுவை விரட்டுவதற்காக தொடர்ந்து ஒருவர் கொசுவர்த்தி சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால் நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவு உரிய காற்றை எடுத்து கொள்ள இயலாமல் போய் விட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கொசுவர்த்திகளினால் வரும் காற்றை பிறந்த குழந்தைகள் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படுவதாக லக்னோ பல்கலை கழக ஆய்வு எச்சரிக்கறது. மும்பையில் நடத்தப்பட்ட ஆய்வில் கொசு விரட்டிகளை ஓட்ட பயன்படுத்தப்படும் ரசாயனம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது. என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கொசு விரட்டியில்லுள்ள ட்யேக்சின் புற்றுநோயை உண்டாக்ககூடியது. அலேத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்லமெல்ல குறைக்கும் தன்மை உடையது என்கிறார்கள்.
இவற்றிலிருந்து தப்பிப்பது இயற்கையான ரசாயன கல்லப்பில்லாத மூலிகைகளை கொண்டு செய்யப்பட்டதான கொசுவர்திகளை பயன்படுத்துவதும் கொசுவலைகளை பயன்படுத்துவதும் தீர்வாக அமையும்.
கொசுவை விரட்டுவதற்காக தொடர்ந்து ஒருவர் கொசுவர்த்தி சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால் நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவு உரிய காற்றை எடுத்து கொள்ள இயலாமல் போய் விட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. ...
பதிலளிநீக்குமேற்கூறிய உடல்நலக் குறைவுக்கு சித்த மருத்துவத்தில் என்ன மருந்து சொல்லப்படுகிறது...
பொதுவாக நுரையீரலை துய்மைபடுத்திக் கொள்ள மூச்சு பயிசிகள் உதவும் அதிகாலையி லேயே செய்யலாம் . குறிப்பாக சித்த மருந்தான அணு தைலம்மூக்கில் இரண்டு சொட்டு விட்டு வாயில் கொண்டுவந்து துப்பிவிட்டு தொடர்ந்து கொசு விரட்டி பற்றி நீங்கள் கேள்வி கேட்டிருந்தீர் . மூச்சு பயிற்சி செய்யலாம் நுரையீரல் தூய்மையாகும் polurdhayanithi
பதிலளிநீக்கு