ஜனவரி 24, 2011

சிறுநீரக கற்கள்


சிறுநீரக கற்கள்

சித்தமருத்துவர்கள் அரச உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகத்தை குறிப்பிடுவார்கள் . இதன்பணி அவ்வளவு மகத்தானது. இது அவ்வளவு எளிதில் கெடுவதில்லை . கெட்டால் அவ்வளவு எளிதில் சீராவதில்லை .தலையில் தடவிக்கொள்ளும் மயிர் சாயம் முதல், கடின வீரியம் கொண்ட இரசாயன மருந்துகள், சாராயம் இவைகள் எல்லாமே சிறுநீரகத்தை கேடுஅடைய செய்யக் கூடியன .

சிறுநீரகம் மிகவும் மேன்மையானது . இது அவரை விதை வடிவில் மனிதனின் இடுப்புக்கு கீழ்பகுதியில் பத்து செமி நீளம் , ஆறு செமிஅகலம் , இரண்டரை செமி கனத்தில் இருக்கும். இதனுள் பத்து இலட்சம் சிறுநீர்வடிப்பிகள் உண்டு. இவற்றின் வேலைஉடலில் உள்ள இரத்தத்தை
துய்மை யாக்குவதுதான் . அதாவது வடிகட்டும் பணி , அரத்தத்தில் உள்ள தேவை இல்லாத நீரையும் தேவையில்லாத உப்புகளையும் பிரித்தெடுப்பதுதான். ஒருவரின் சிறுநீரின் அளவு அவரின் உணவு மற்றும் அருந்தும் நீர் ஆகியவற்றின் அளவின்படி மாறுபடும் .

சிறுநீரக கற்களின் வகைகள்

நாம் உண்ணும் உணவு பருகும் நீர் வாழ்க்கைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் சிறுநீரக கற்கள் உண்டாகியது .சுன்னசத்து (கல்சியம் )ஆக்சலேட்டுகள் , பாசுபேட் , யூரிக் அமிலம் ,சிசுடைன் ,
போன்ற வகை சிறுநீரக கற்கள் தோன்றுகிறது . இவைகள் சிறுநீரகத்தில் , சிறுநீர் குழாயில்,சிறுநீர் பையில் , சிறுநீர்த்தாரையில் என நோய்க்கு தக்கபடி உண்டாக்கலாம் .

இந்நோய்க்கான அறிகுறிகள்

@ விலாப்பக்கத்தில் விட்டுவிட்டு வலி
@ சிறுநீர் கழிப்பதில் சிரமம்
@ சிறுநீர் குறைந்து வெளியேறல்
@ கக்கல் (வாந்தி ) உண்டதால்
@ தொடை இணைப்பு , தொடை யில் , அடிவயிறு , ஆண்குறி , பெண்குறி போன்ற இடங்களில் வலி உண்டாகலாம் . சிறுநீர் குழாயில் கள் இருந்தால் இங்கு வலி தோன்றலாம் .

நோய் காரணங்கள்
@ நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் ,
@ மயக்கப் பொருட்கள் (மது ) அருந்துதல் பழக்கங்களினால் .
@ முறையில்லாத சம சீரில்லாத உணவு .,
@ போதிய நீர் அருந்தாமை பன்னாட்டு நிறுவனங்களின் மென்பானங்கள் அருந்துதல் .

தீர்வுகள்

நோய்களுக்கான காரணங்கள் கண்டறியப்படவேண்டும் . முறையில்லாத உணவுகளை நீக்குக .
சிறுநீரகத்திற்கு எரிச்சல் ஊட்டும் உணவுகள் நீக்குக . புளிப்புத்தன்மை , அமிலத்தன்மை கொண்ட உணவுகள் நீக்குக. மது , ஊறுகாய் , வெள்ளரி , தக்காளி , பசலை , கோசு, காலிபிளவர் ,போன்றவை நீக்குக . இறைச்சி, பன்னாட்டு நிறுவன மென்பானங்கள் நீக்குக.

கல்சியம் , மக்னீசியம், பசுபெட் ,கார்பநேட்டுகள், சத்துகள் கொண்ட உணவுகள் மிகையாக எடுப்பது போன்ற காரணங்களினால் உண்டான கற்கள் எனின் அந்த உணவுகளை நீக்குக .
யூரிக் அமிலத்தால் உண்டான கற்கள் என்றால் அமிலத்தன்மை கொண்ட உணவுகள் நீக்குக .
தண்ணீர் மூன்று முதல் நான்கு லிட்டர் அளவிற்கு நாளும் அருந்துக . தண்ணீரின் தன்மையை சோதித்து அறிந்து கொண்டு செயல்படுக சிலவகை கற்கள் தண்ணீரில் கலந்துள்ள மினரல் களினாலும் கற்கள் தோன்றலாம் என கண்டறியப்பட்டு உள்ளது .
துளசி யுடன் தேன் கலந்து உண்க இது சிறுநீரகத்திற்கு சக்தியளிக்கும் .
இளநீர் , பதநீர், மோர் , பார்லி நீர் , வெந்தயம் நினைய வைத்த நீர் அருந்துக.
பூண்டு , கருணை தேவை எனின் முள்ளங்கி நீக்குக .
சைனசு உணவுகள் நீக்குக
காபி , தேயிலை , நீக்குக .
சாக்லேட் , ஐசுகிரீம் நீக்குக. .
காரணங்களுக்கு ஏற்றபடி தக்காளி, கொய்யா, பேரிச்சை , முந்தரி , வாதுமை, பட்டாணி , நீக்குக .

ஆசனபயிற்சி கள்

சிறுநீரக கற்கள் சிக்கலுக்கு புஜங்காசனம் ,தனுராசனம் ,முக்தாசனம் , அலாசனம் ,உத்திதான் பாதசனம் செய்க .
சித்தமருத்துவம் காப்போம் நோய் நீங்கி நீடு வாழ்வோம் More than a Blog Aggregator

6 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல்ணே.
    வெள்ளரியும் முள்ளங்கியும் இதற்காகச் சாப்பிட வேண்டும் என்று
    கேள்விப்பட்டு சாப்பிட்டு வருகிறேனே. ஆனால் நீங்கள் நிறுத்தச்
    சொல்கிறீர்கள். டெஸ்ட் பண்ணியதில் Found some gravels என்று வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி பாராட்டுகள் . சிறுநீரக கற்கள் பல்வேறு கரங்களினால் வருகிறது . உங்களுக்கு வந்த சிறுநீரக கல் எந்த அமிலத்தன்மை கூடினதால் வந்தது என கண்டறிந்து அதற்கேற்றபடி செயல் பட எமது பதிவு கோருகிறது நோய்களின் காரணங்களுக்கு தக்கபடி உணவுமுறைகள் மாறும் என தொளிவு படுத்தப்பட்டு வுள்ளது .

    பதிலளிநீக்கு
  3. விரிவான விளக்கங்களும் தகவல்களும். பகிர்வுக்கு நன்றிங்க....

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப விரிவா, சொல்லி இருக்கீங்க..
    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான அதே நேரத்தில் அவசியமான தகவல்

    பதிலளிநீக்கு
  6. சிறுநீரகம் பற்றிய இரண்டு பதிவுகளும் படித்தேன்.மிக மிகப் பிரயோசமான குறிப்புகள்.
    நன்றி தயா !

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...