சிறு நீராக செயலிழப்புகள்
இன்றைய அவசர வாழ்க்கை முறை மனிதனை பாடு படுத்துகிறது . முறையில்லாத
உணவு முறை நோயாளி யாக்குகிறது எதை எப்படி திண்பது எவருக்குமே
தெரிவதில்லை . எங்கேதேடுவது வாழ்வை ? விடைதெரியாமல் வீணடிக்கிறோம் .
இருக்குமிடத்தை காணுவதற்கு சிரமப்படுகிறோம் . அனால் தேடிநோமில்லை
.
பழமைமறா பண்பாட்டைத் தேடுவோம்
எங்கும் ஓடி ஒழிந்துவிடவில்லை மனித வாழ்வு மண்ணில் புதையலாக
கிடக்கிறது தொடுவோம வாருங்கள் .
இந்திய புள்ளிவிவரம்
இந்தியாவில் ஆண்டு தோறும் 1 .5 இலட்சம் பேர் மிக மோசமான சிறுநீரக
கோளாறினால் பதிக்கப்
படுகின்றனர் . இவர்களில் மூவாயிரத்தைநூறு போர் மட்டுமே மாற்று சிறுநீரகம்
பெற முடிகிறது .
மாற்று சிறுநீரகம் கிடைக்காதவர்கள் டயாலிசீஸ் செய்ய வேண்டியது கட்டாயம் .
வாரத்திற்கு மூன்று முறை செய்யவேண்டி வரும் இதற்க்கு ஆகும் மருத்துவ செலவு
மிகுதி இந்த அதிகப்படியான மருத்துவ செலவினால் பத்தாயிரம் பேர் மட்டுமே
டயாலிசீஸ் செய்து கொள்ளுகின்றனர் . பெரும்பாலோர் நோவுடன் மடிகின்றனர்
என்கிறது 23 திசம்பர் 2010 புதிய தலைமுறை இதழ்
முறையில்லாத உணவும் சரியில்லாத வாழ்க்கைமுறையும்
இன்றைய வழக்கை முறை விரைவை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது . இதில் தன் வழ்வைபற்றி துளியளவும் நினைப்பதில்லை . விரைந்தோடும் நோக்கில் கிடைத்தை உண்டு செரிக்கவேண்டும் என நினைக்கின்றனர் . நம் மனித உடல் என்பது இரும்பினால் செய்யப்பட்டதில்லை .
மாறாக சதையும் எழும்பும் ரத்தமும் கொண்டதாகும் . எனவே இரசாயணம் கலந்த உணவு பழக்கங்கள் மனிதனை பாழாக்க கூடியன எனவே நம் உணவு இயற்கையானதா இரசாயணம் கலக்கப்பட்டதா என்பதை சிந்திக்க வேண்டும் . நாம் இயற்கையானது என எண்ணிக்கொண்டிருக்கும்
உணவுகள் எல்லாம் இன்றைய விரைவு உலகம் நாசப்படுத்திக்கொண்டு இருக்கிறது . வாழைபழம் ஒன்றை எடுத்துக் கொள்வோம் பச்சை வாழைபழம் போலவே இருக்கும் அனால் இப்போது மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது இதை பழுக்கவைக்க இரசாயணம் கலக்கப் படுகிறது அப்படி பழுக்கவைக்கபடுவதால் விரைந்தும் நல்ல வண்ணத்திலும் கிடைக்கிறதாம். இவற்றால் சிறுநீரகம்
விரைந்து செயலிழக்கும் என்கிறது ஆய்வுகள் . இன்றய துரித உணவுகள் சிறுநீரகத்தை மட்டுமல்ல புற்று நோயையும் உண்டாக்கும் என்பது எத்தனைபேருக்கு தெரியும் ?
சிறிய சிறிய நோய்களுக்கு எல்லாம் வீரியமிக்க மருந்துகளை உண்பதால் சிறுநீரகம் கெடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . முறையான வாழ்க்கை முறைக்கு மாறுவோம்
.
கலப்படங்கள்
இன்று மனித நேயமும் உண்மையும் மரித்துப்போன தனியுடமை அமைப்பு முறையாகிவிட்டது . எனவே இங்கு கிடைத்தவரை எல்லாம் நமதே என்ற எண்ணம் கொண்டுவிட்டனர் . எனவே இங்கு பணம் மட்டுமே குறிக்கோள் என்று வந்துவிட்டது . உண்மை , நேர்மை என்பதெல்லாம் கேலிக்குரியவனாக ஆகிவிட்டது . முறையான உணவு பழக்கமும் இயற்க்கைசர்ந்த உணவுமுறைகளும் மனிதனை நோவில் இருந்து விடுவிக்கும் .கலப்பட பொருட்களை இனங்கண்டு அவற்றை எல்லோரும் எதிர்க்க கற்போம் . ஒரு தீமை நடக்கிறது என்றால் அவற்றை அறிவுத்துறையினர் இனங்கண்டு சொன்னால் ஒட்டுமொத்த சமூகமும் எதிர்க்க வேண்டும் . இல்லை என்றால் காட்டுமிராண்டி கூட்டமாக எல்லோரும் மடிந்து போவது தவிர்க்க இயலாது . சிந்திப்போம் விழிப்போம் . நோய் வரின் தூய தமிழ சித்த மருத்துவத்தை கடைபிடிப்போம் நோய் வெல்வோம் .
வாழ்க தமிழர் கலைகள்
இன்று மனித நேயமும் உண்மையும் மரித்துப்போன தனியுடமை அமைப்பு முறையாகிவிட்டது . எனவே இங்கு கிடைத்தவரை எல்லாம் நமதே என்ற எண்ணம் கொண்டுவிட்டனர் . எனவே இங்கு பணம் மட்டுமே குறிக்கோள் என்று வந்துவிட்டது . உண்மை , நேர்மை என்பதெல்லாம் கேலிக்குரியவனாக ஆகிவிட்டது .
பதிலளிநீக்கு......இன்றைய சமூக நிலையை படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.
மிகவும் பயனுள்ள தகவல் அய்யா என்னுடைய ப்ளாக்கிலும் இணைப்பு கொடுத்துள்ளேன் அனுமதிக்கவும் மிக்க நன்றி
பதிலளிநீக்குwww.kobikashok.blogspot.com
உண்மையான செய்திகள்...
பதிலளிநீக்குஎன்ன செய்ய வேண்டும் நாம்? அதுதான் இப்போதைய கேள்வி.
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி . விரிவாக கருத்து சொன்ன சகோதரி சித்ரா அவர்களுக்கும் எசு.அசோக் அவர்களுக்கும் , ஐயா. மாதவன் சீனுவாச கோபாலன் அவர்களுக்கும் பாராட்டுகள் .
பதிலளிநீக்குஐயா , என்ன செய்ய வேண்டும் என கேட்டிருந்தீர்கள் இங்கு நீங்கள் கேட்டது நோய்க்கு தீர்வு கேட்டிர்களா அல்லது குமுகாய சிக்கல்களுக்கு தீர்வு கேட்டிர்களா என விளங்கவில்லை . இருப்பினும் குமுக சிக்கல்களுக்கு மக்கள் கூடம் அறிவுத்துறை முழுமையான வழிகாட்டலை கடைபிடிக்கவேண்டும் . நோய்க்கு தீர்வு இதளியம் (இரசாயணம் ) கலந்தவைகளை நீக்கி உண்ண கற்கவேண்டும் . இது ஒருவரியில் சொல்லமுடியாது . விரிவாக இங்கு கதைக்க வேண்டுமானால் மக்களுக்கு பொறுமையில்லை . எமது உழைப்பு வீணாக்கப்படும் .விவவ்ரங்கள் மின் அஞ்சலில் தெரிவிக்கலாம் .
பதிலளிநீக்குநல்ல விடயங்களைப் பகிர்ந்துள்ளிர்கள் மிக்க நன்றிகள்...
பதிலளிநீக்குஇன்று வலைச்சரத்தால் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். வலையுலகில் மேலும் சாதிக்க நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குword verification நீக்கி விடுங்கள்.
பதிலளிநீக்குபின்னூட்டம் இட விரும்புபவர்கள், பின்னூட்டம் போடாமல் சென்று விட வாய்ப்புள்ளதே...
பொதுவாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் சிலர் அது சிறுநீரகத்திற்கு அதிக வேலை கொடுக்கும் எனவே கூடாது என்று சொல்கிறார்கள். எது சரி, சற்று விளக்குங்கள் அய்யா?
பதிலளிநீக்குஉபயோகமான தகவல்கள்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துகளிற்கும் நன்றி .அசோக் .எசு அவர்களுக்கும் ம.தி .சுதா மற்றும் எல் .கே மற்றும் பாரதி பாரதி அவர்களுக்கும் திரு . இராம் அவர்களின் கருத்திற்கும் வருகைக்கும் உளம் கனிந்த பாராட்டுகள் . நண்பர் பாரதி பாரதி அவர்களின் தண்ணீர் அதிகம் குடித்தல் பற்றியது . தண்ணீர் அதிகம் குடிப்பது என்பது எப்போது குடிக்கிறோம் என்பதுதான் . தண்ணீரை பொறுத்தவரை எப்போது குடிக்கிறோம் என்பதுதான் . உணவுக்கு முன்பாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவும் , உணவு முடித்து இரண்டு மணிநேரத்திற்கு பின்பாகவும் தண்ணீர் குடிப்பது அமுதமாகும் . உணவின் இடையிடையே தண்ணீர் குடிப்பது நஞ்சாக மாறும் . வயிற்றில் செரிமனத்திர்க்காக தொங்கியுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நீர்த்து போக செய்து செரிமானத்தை நீட்டிக்கும் . எனவே தண்ணீர் குடிப்பது என்பது உணவுக்கு பின்னர் குடிப்பதே சிறந்தது .
பதிலளிநீக்குஅருமையான பதிவு அய்யா.
பதிலளிநீக்குஇது மக்கள்களுக்கு பயன்தரும் ப்ளாக்காக இருப்பதால் உங்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும்,ஆனால் யார் வழங்குவது என்பதுதான் கேள்வி.
நமக்கு விருதுகள் வழங்கும் அந்தஸ்த்து வரவில்லை வந்ததும் கண்டிப்பாக உங்களை கவனித்து விடவேண்டியதுதான்.
வருகைக்கு பாராட்டுகள் நாம் விருது களுக்காக எழுதவில்லை உண்மையில் இந்த தமிழ் மக்கள் அனைவரும் நோய் வென்று நீடு வாழவேண்டும் என்பதே எமது அவா கடுமையான போராட்டங்களுக்கு இடையிலே தான் ஒவ் ஒரு பதிவும் அரங்கேறுகிறது எமக்கு உரிமையாக கணினி கூட இல்லை பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கியே உள்ளோம் விருத்து கள் எம்மை மகிழ்விக்காதூ எமது
பதிலளிநீக்குமக்கள் விழித்தெழுந்தால் அதுவே எமக்கான மகிழ்ச்சி .