
பண்பாட்டுசீரழிவின்மூலவேர்
சீரழிவிற்க்கான காரணங்களை இனம் கண்டு மரபுவழிப் பட்ட நமது வாழ்வியல் முறையை நிலை நிறுத்த வேண்டிய திட்டமிடல் களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்த வேண்டியது மிகவும் தேவையான ஒன்றாகும் .நமது பழமை வாய்ந்த வாழ்வியல் முறை மிகசிறந்த பின்புலத்தைக் கொண்டதாகும் இதை பாழ்படுத்த அனுமதிப்பது பெருங்குற்றமாகும் . ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தொல்காப்பியம் முதற்கொண்டு ... வள்ளுவம் தொடங்கி நமக்கு வாழ்வியல் முறையை எப்படி பண்படுத்தி கொடுத்து உள்ளனர் நமது முன்னோர் இதை நாம் பாதுகாக்க வேண்டாமா அதற்க்குத்தான் நாம் இங்கே சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம் .
இன்றைய பெரும்பான்மை ஊடகங்கள் ....பாலுறவைத் தூண்டும் செய்திகளைத் தங்கி வருகிறது . இதை கட்டுப் படுத்த நாம் தவறி விட்டோம் இதனால் நமது வாழ்வியல் முறை சீரழிந்து கொண்டு இருக்கிறது . நாம் சீரழிந்து கொண்டு இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே பலர் சீரழிந்து கொண்டு இருக்கின்றனர் இதை படம் பிடித்து நமது பழமை வாய்ந்த வாழ்வியல் முறையை கலைகளையும் அறிமுகப் படுத்தாவிட்டால் எப்படி சமூகம் சீரடையும்?
பெண்கள் மனித இனத்தில் முக்கியமையான பாத்திரப் படைப்பு இதை பாது காக்க வேண்டியதின் தேவையை உணராமல் இருக்கிறோம். பாலுறவில் சிலருக்கு ஈர்ப்பு கொஞ்சம் அதிகமாக உண்டாகி விடுகிறது இன்றைய சூழல் அவர்களின் தேவையை தமது இணையர் நிறைவேற்றாமல் விட்டு விடுகிறார் அல்லது இயலாமையில் உள்ளார் என வைத்துக் கொள்வோம் இதை சரி செய்ய முயல வேண்டுமேயன்றி வேறு ஒருவருடன் பாலுறவைப் பகிர்ந்து கொள்ளுவதால் சீரழிவுகள் தலை தூக்குகிறது . என்பதை அவர்களுக்கு உணர்த்தி பண்பட வைக்க வேண்டும்.
தமது இணையரை விடுத்து பலருடன் பாலுறவு கொள்ளுவதால் உடலின் ஏழு தாதுக்களும் கேடு அடைகிறது இப்படி தொடர்ந்து கேடோடைவதால் உடலில் கடுமையான பதிப்பினை உண்டாக்குகிறது . இவருடன் பாலுறவு கொள்ளும் அனைவரும் நோய் கண்டவர் ஆகிறார்.
மனித உடலில் ஆணாக இருந்தாலும் அது பெண்ணாக இருந்தாலும் விந்துப் பொருள் மிகவும் உன்னதமானது இதை அளவறிந்து செலவிட வேண்டும் மிகையாக செலவிட்டால் உடல் சூடேறி கேடு அடையும் இதை எவராலும் தவிர்க்க இயலாது . அனால் முறையாக ஒரு கணவனும் மனைவியும் எவ்வளவுதான் பாலுறவை வைத்துக் கொண்டாலும் உடல் கேடு அடையாது .
பலரோடு பாலுறவினை பகிர்ந்து கொள்ளுகிற போது உடலில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்ந்து உடல் கேடு அடைகிறது . குறிப்பாக ஒருவர் பாலுறவு வைத்துக் கொண்ட 48 மணி நேரம் வரை அதனின் தாக்கம் பெண்களுக்குள் உண்டாக்கும் இந்த இடைப்பட்ட நேரத்தில் வேறு ஒருவருடன் பாலுறவைப் பகிர்ந்து கொண்டால் .... இது தொடர்ந்தால் குறிப்பிட்ட அந்த பெண் கடுமையான இரசாயன மாற்றங்கள் உடலில் உண்டாகி தினமும் பலரோடு பாலுறவை வெறித்தனமாக வைத்துக் கொள்ள தூண்டுகிறது . என்கிறது அறிவியல் .
இதை தடுக்க என்னும் போதுதான் குடும்பங்களில் சிக்கல் தோன்று கிறது . இந்த நேரத்தில் மனைவியின் வெறித்தனத்தை தீர்த்துக் கொள்ள பலரை நாடுகிறாள் . கணவன் நாணுகிறான் குடும்பம் சீரழிகிறது . இப்படிப் பட்டோருக்கு ஓரினச் சேர்க்கை முதற் கொண்டு சுய இன்பம் வரை துணையாகிறது . இவற்றால் உடல் கேடு அடையும் என்பது உண்மை .
இந்த பண்பாட்டு சீரழிவின் தொடக்கத்திலேயே இனம் கண்டு அதை தடுத்து விட்டால் குடும்பமும் சீரழியாது . நாடும் கேடு அடையாது. இவர்களின் பாலுறவு எண்ணங்களை தூபமேற்றி விடுவது இன்றைய இணையதளம் முதற்க் கொண்டு கைப் பேசிவரை துணைபோகிறது .
என்ன செய்யப் போகிறோம் ?
சித்த மருத்துவத்தில் இதற்கு என்ன தீர்வு சிந்திப்போம்.
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்.

nandru
பதிலளிநீக்குI would highly appreciate if you guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குTamil News | Tamil Newspaper | Latest Tamil News
transmac key
பதிலளிநீக்கு