டிசம்பர் 03, 2012

திருமணத்திக்கு ஆயத்தமாவோம் 4




      வணக்கம் உறவுகளே . உங்களின் அளப்பரிய பின்னூட்டங்கள்  என்னை  உண்மையில் வியக்க வைக்கிறது  எப்படி  தமிழர்கள்  அறிவிற்கு  அறிவியலிற்கு முக்கியத்துவம்  கொடுக்கிறார்கள்  உடலை எப்படி பேணி வளர்க்கிறார்கள் என  பார்க்கும் பொது மிகவும் மகிழ்வாகவும்  பாராட்டும் படியாகவும்  நோய் நீங்கி  எந்த மருத்துவ நடுவத்தையும் தேடாமல்  எளிமையான  மூலிகைகளைக் கொண்டு  நோய் நீங்கி  நீடு  வாழ்ந்து  வருவது குறித்தும் நோய் கொள்ளுவது குறித்து எல்லை  இல்லா  அம்கிழ்வைத்தருகிறது பாராட்டுகள்  இங்கு எல்லோரும் நல்லவர்களே  உண்மையில்  மது அருந்து  கிறவர்களும் புகை பிடிப்பவர்களும்  ஏன்  செய்கிறார்கள்  குறிப்பிட்ட அந்த தொழிலை மேற்க்கொல்லுகிறவர்கள் .... கொல்லு ... பிழைப்பு  நடத்த வேண்டாவா  நமது விஜய்  மல்லையா போன்றவர்களும்  itc  போன்ற  நிறுவனங்கள்   வளர வேண்டாவா  எப்படி சிந்திகிறார்கள்  பாருங்கள்   தமிழர்கள் எப்போதும் பரந்த உளப்பாங்கு  உள்ளவன்  எவனாவது பசி  என்று வந்துவிட்டால்  ஓடி சென்று  தான் பட்டினியாக இருந்தாலும் அவனுக்குப் போட்டு  இவன் பசித்து இருப்பான் . பாருங்க  இவன்  தமிழன் வரலாற்றில்  இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக  தமிழ நாட்டை  ஆண்டதாக  வரலாறே  இல்லை எவ்வளவு  பரந்த மனப்பான்மை கொண்டவன் தமிழன்  ஈழத்தில்  கொத்து கொத்தாக   கொன்றார்கள்  அமைதி  காத்தோம் ... காவிரி , முல்லைபெரியாறு , கிருஷ்ணா  தண்ணீர் தரவில்லையா  நாங்கள் வெக்கமும் பட மாட்டோம் வேதனையும் பட மாட்டோம்  எங்கள்  தலைவர்கள் எல்லோரும்   தமிழர்களுக்கு பெரும் தீங்கு  செய்தார்களா  யார் சொன்னது அவனை உடனே காட்டிக் கொடு  இப்படி எல்லா  வேலைகளையும்  நாங்களே  தமிழர்களே  தமிழர்களை  அழிப்பெம் ...

         சரி செய்திக்கு வருவோம்  முற்போக்கான  இரண்டு குடும்பம்  இந்த குடும்பங்களில்  இருந்து திருமணம்  இனிதாய்  முடிகிறது . எல்லாமே எளிமையாக  பின்னர்  மணம்  முடிந்து பிள்ளை வீட்டாருக்கு மிகப் பெரிய குறை  காரணம்  பெண் வீட்டில்  மணமகனுக்கு மணக்கொடை (வரதட்ச்சனை ) கொடுக்க வில்லையாம்   போகட்டும்  இந்த பெண் மிகவும் அறிவாளி  அனால்  கொஞ்சம்  யாரு பேச்சையும்  கேட்பதில்லை  உணவு முறை  பெண்ணின் வீட்டில்  உள்ளது மாதிரித்தான்   சமைப்பர்கலாம் இங்கு மாமனார் , மாமியார் , மைத்துனர்  கணவர்  இப்படி  எவர் உணவுப் பழக்கத்தை பற்றியும் கவலை கொள்ளுவதில்லை   உண்மையில் மிகவும் மகிழ்வாக இருந்த கூட்டுக் குடும்பம்  பிரிவை எதிர்  நோக்கி காத்தது  இருக்கிறது. இது முற்போக்கனவர்கள்  என கூறிக் கொள்ளுகிற குடும்பம்  இங்கே இப்படி என்றல்  சராசரி  குடும்பம் எப்படி இருக்கும் பாருங்கள் ....

     எதற்கு பதிவு செய்கிறேன் என்றல்  ஒரு குடும்பம் என்பது    கோவில் போன்றது  இனிமைதரக் கூடியது  மகிழ்வை ஊட்டக் கூடியது   எப்போது வீட்டிற்கு போவோம்  ஆனந்தத்தைக் களிப்போம் என  இல்லாமல்  வெறுப் பேற்றிக்  கொள்ளவா வீட்டிற்கு போவது ? இல்வாழ்வு  கணவனும் மனைவியும் மட்டும் அல்லமால்  அந்த கூட்டுக் குடும்பமே  மகிழ்வை  சந்தித்து  இன்பம் துய்ப்பதாகும்  இப்படி எல்லாம் தமிழ் நாட்டில்  படம் கூட  எடுப்பதில்லை  என்கிறார்கள்  பாவம்  விடுங்கள்   அதற்குதான்  உங்களுக்கான  குடும்பத்திற்கான  ஏற்றதான  மணப்பெண்ணை  தேர்ந்து எடுங்கள்  எல்லா வகையிலும் உங்களுக்கு பேருந்தும் படியான   குடும்பத்தை  உண்டாக்க முயலுங்கள்  இன்று  படித்தது படிகாதது  எல்லாம் பெண்களுமே  எளிமையையும்  முறையான வாழ்வையும்  வாழ்வதில்லை   தெரியவும் இல்லை  இதனால்தான்  மருத்துவத்தை மட்டும் அல்லாது வாழ்வியலையும்  இங்கு பேசுகிறேன் .... போதுமா ?

      உங்களுக்கு ஏற்ற வாழ்வை தேடும் போதுதான்  நோயில்லாத குடும்பத்தை உண்டாக்க இயலும்  உணவுகள் இயற்க்கை   சார்ந்து  சிறுதானியங் களுக்கு முக்கியத்துவம் அளித்து  குடும்பத்து உணவு முறைகளை முறைப் படுத்துங்கள் . நாட்டுப் புற காய்களுக்கு  முக்கியத்துவம்  அளியுங்கள் . உணவில் கீரைகள்  முக்கிய பங்கு வகிக்கட்டும்  இயற்க்கை  சார்ந்த  வாழ்க்கை முறை  நீடிக்கட்டும் . தானியங்கள் , கொட்டைகள்  போன்றவற்றை மிகையாக பயன்படுத்துங்கள் . வாரம் இருநாள்  எண்ணைக்  குளியல் செய்யுங்கள்  உங்களின் உணவில்  எள் , நிலக்கடலை  பேன்றவை  மிகையாக  இருக்கட்டும் .
வாழ்வு  இனிதாகும்  அடுத்த பதிவில்  சற்று விரிவான புள்ளி விவரங்களுடன் ....

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம்


பிழைகள்  மிகுதிக்கு  பொறுத்து அருள்க ...

      
More than a Blog Aggregator

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...