பொதுவாக தமிழ மருந்துகள் உணவுப் பொருளாகவும் இருப்பது தமிழர்களின் உணவின் சிறப்பு எனலாம் . அந்த வகையில் திப்பிலி சிறந்த உணவுப் பொருள் மட்டுமின்றி மிகசிறந்த மருந்தும் ஆகும் .இதை எப்படி மருந்தாகும் ? உணவாக எப்படி பயன்படுத்துவது ? மருந்தாக எப்படி பயன்படுத்துவது ? சிந்திப்போம் ....
இது கொடிவகையை சேர்ந்தது மிளகைக் காட்டிலும் இந்தன் வீரியம் மிகவும் மிகுதி .இது பச்சையாக இருக்கும்போது இதன் சுவை இனிப்பு அனால் உலர்ந்தபின் இதன் சுவை கார்ப்பு என்னே இயற்கையின் விளையாட்டு ?
இது வெப்பத்தையுண்டாக்கும்
அகட்டுவாய் அகற்றுதல் ஆகியவை திப்பிலின் தனிக்குணங்கள் .
பச்சைத் திப்பிலி கபத்தையும்
சீதத்தையும் உண்டாக்கும் .
அனால் பித்தத்தைப் போக்கும் .
உலர்ந்த திப்பிளியினால் ...
இருமல்
குன்மம்
இரைப்பு
சயப்பிணி
ஈளை
பாண்டு
சந்நிவாதம்
அரோசகம்
பெருமல்
தலைவலி
மூர்ச்சை
தடுமன் (சளி )
பீலிகம்
மலப்பெருக்கு
பெருவயிறு
முத்தோடம்
குளிர்சுரம்
மேககட்டி
ஆசன நோய்
தொண்டை நோய்
அவரனபித்தம்
மூக்கு -காது -கண் நோய்
நோய்கள் விலகும்
நீர்த்த விந்து இருகும் .
ஆசனநோய் தொண்டைநோய் ஆவரண பித்தமுதல்
நாசிவழி காதிவைநோய் நாட்புழு நோய் - வீசிடு
யன்காலன்ச நஞ்ச்சிதையும் அம்பாய் அழிவிந்தும்
போன்கலன்ச நன்கைகொட் போல். (தேரையர் குணபாடம்)
திப்பிலி ஐந்து பங்கு தேத்தான் விதை மூன்று பங்கு இரண்டையும் நன்கு அரைத்து கழுநீரில்
எட்டு கிராம் அளவு மூன்று நாள் காலையில் கொடுக்க பிரமேகம் பெரும்பாடு நீங்கும் .
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த சித்த மருத்துவத்தை ஏன் நாம் பின்பற்ற மறுக்கிறோம் சிந்திப்போமா ?
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்
தங்கள் பதிவு ஒன்றை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். நேரம் இருக்கும் போது இங்கு வந்து பாருங்கள், முகவரி கீழே.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2012/08/blog-post_17.html