இது ...
பன்முகத்தன்மை கொண்டவர்கள்
பறைசாற்றுகிற களம்.
இங்கு ...
விடிந்தால் புதிய புதிய செய்திகள் .
மாறுபட்ட சிந்தனைகள்
மகத்தான கண்ணோட்டங்கள் .
மனிதனை
" மா " மனிதனாக ஆக்குகிற
கோட்பாடுகளை விதைக்கும் அறச்சாலைகள்
புதியன படைக்கத்தூண்டும்
வேள்விச்சாலைகளும் உண்டு .
இங்கு ...
மூழ்கி முத்தெடுத்து
சமூகத்திற்கே அர்ப்பணிக்கிறவர்களும்உண்டு.
காட்டாற்று வெள்ளமாய் பாயும்
கருத்துப் பட்டறைகளும் உண்டு .
இங்கு ...
தன்னுணர்வில் வீழ்ந்து
கிடப்பவர்களும் உண்டு
மக்கள் நலன்பேசும்
சமத்துவ
வாதிகளும் உண்டு.
சிந்தையுள் பட்டதை
சந்தைப் பொருளாக்குகிறவர்களும்
கண்ணில் பட்டதை
ஓவியமாக்கி வண்ணச் சிறகு
விரித்து விண்ணில்
பறக்கிரவர்களும் உண்டு .
சின்னத்திரையையும்
வண்ணத்திரையையும்
பக்கம் பக்கம்மாய்
ஆய்வு செய்கிறவர்களும் உண்டு .
செப்படி வித்தைபோலே
கண்கட்டி வித்தை காட்டி
கவர்ந்திழுக்கும் நல்லவர்களும் உண்டு.
உள்ளங் கவர் கள்வர்போலே
கருத்துகளை களவுசெய்து
பட்டைதீட்டி பதிப்பிக்கும்
பண்பாளர்களும் உண்டு .
ஆனாலும் நாமனைவரும்
ஓர் சாதி ஆம்
தமிழ் வலைப்பதிவர்சாதி .
பதிவுலகச் சான்றோரே !
நமக்கென ஒரு பெருங்
கூட்டம் கூட்டினீர் நன்றி .
இனி ...
ஊர்தோறும் வேடந்தங்கலாய்
கிளை பதிப்போம் அதில்
நாமனைவரும் ஒன்றுகூடி
புதியன படைப்போம் .
கருத்துக் களின் கருவூலமாய்
தமிழர்தம் உயரிய கலைகள்
பண்பாடு நாகரீகம்
தமிழர் தத்துவம்
தமிழ மருத்துவம் -ஆம்
சித்தர்களின் சீரிய
சித்தமருத்துவம்
விளையாட்டு ...
கட்டிடக்கலைகள்
ஒக இருக்கை...
இசை நடனம்
போன்ற வற்றோடு நம்
புறநானூற்றையும் புரட்டி
அகநானூற்றையும் அகழ்ந்தெடுத்து
இந்த சமூகத்தை
வழி நடத்துவோம் .
பொழுது போக்கு
அம்சங்கள் தேவைதான் அது
ஊருகாய்போல இருந்தால் நன்று
ஊறுகாய் உணவும் ஆகிவிடாது
ஆகிவிடக்கூடாது .
.
அறிவு சான்றீர்
அறத்தை விதைப்போம்
நல்லன அறுவடை செய்வோம்
களத்தில் இருக்கும் நாம்
கருத்தினில் ஒன்றிணைந்து
புதியன புகுத்துவோம்
அன்பும் அமைதியும்
பெருக்கெடுக்க
நன்மையையும் நேர்மையும்
செழித்தோங்க
அறிவெனும் கருவி ஏந்தி
வென்றெடுப்போம் புத்துலகை .
நேற்று நடந்த பதிவர்களின் சந்திப்பில் நடந்த பாவரங்கில் கலந்து கொண்டு வாசித்த பா .
விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது . விழாக்குழுவினருக்கு நமது பாராட்டுகள் .
தமிழன்புடன் ...... போளூர் தயாநிதி
.
பதிவர்களின் சந்திப்பில் நடந்த
பதிலளிநீக்குபாவரங்கில் கலந்து கொண்டு வாசித்த அருமையான பா -பாராட்டுக்கள்.. .
வாழ்த்துக்கள்... நன்றி...
பதிலளிநீக்குஉங்களை சந்தித்ததில் உள்ளம் நிறைந்தது ...
பதிலளிநீக்குஉங்களின் இந்த பா மிகவும் அருமையாக இருந்தது சார் .. என் நன்றிகளும் வணக்கங்களும் ..