மே 30, 2011

இடுப்புவலி காரணங்களும் தீர்வுகளும்.இப்போது எல்லா அகவையிலும் இந்த இடுப்பு வலிக்கு ஆளாகின்றனர் . இது காரணமில்லாமல் இல்லை .நமது உணவு முறை மற்றும் வாழ்க்கைமுறைமை மாறி விட்டதன் காரணமன்றி வேறல்ல. இன்றைய உணவு முறை மேலைநாட்டு பண்பாட்டை அடியொற்றி வருவதாகும். இதனால் வரும் நோய்கள்தான் இந்த இடுப்புவலி முதல் ஈவாக (போனசாக ) வரும் சர்க்கரை நோய், மாரடைப்பு ,சாவு உட்பட எல்லா நோய்களும்.

உணவுமுறையே நோய்க்கு காரணம்

இன்றைய உணவுமுறை உண்ணுகிறவர்களுக்கு இரண்டு பங்கும் மருத்துவனுக்கு ஒருபங்கும் சேர்த்து உண்ணப்படுகிறது . முறையில்லாத உணவை உண்டுவிட்டு பின்னர் மருத்துவனிடம் சென்று அவர்களை வாழ வைக்கிறது அல்லவா ? கடந்த இருநூறு ,இருநூற்று ஐம்பது ஆண்டுகளாக நம்மவர்கள் கரும்பு சர்க்கரையை உண்ண பழகி விட்டார்கள் இந்த கரும்பு சர்க்கரை மனிதனின் எலும்புகளை கரைத்து சிறுநீர் முலம் வெளியேற்றும் என பல ஆய்வு முடிகள் தெரிவிக்கிறது .
இப்படி எலும்புகளை கரைத்து வெளியேற்றும் செயலை செய்து பின்னர் எலும்புகளை பலப்படுத்தும் எந்த பணியையும் நாம் செய்வதில்லை . சித்த மருத்துவம் பருண்மையாக தான் ஆய்வை மக்கள் முன் வைக்கிறது . வெள்ளை நச்சு (விஷம் ) என கரும்பு சர்க்கரை , உப்பு, மட்டை தீட்டப்பட்ட அரிசி போன்ற வற்றை குறிப்பிடுகிறது . இன்றைய நிலையில் இந்த மூன்றும் இல்லாமல் எந்த உணவும் இல்லை என்றாகிவிட்டது ஆக நோய்க்கு பஞ்சம் வருமா.?

எண்ணெய் குளியல் .

உடலையும் எலும்பு களையும் கண்ணே போல் காக்கும் வழிமுறைகளான எண்ணெய் குளியல் வேண்டாத செயலாகிவிட்டது . இதனால் எலும்புகள் பலமிழந்து கல கலத்து விடுக்கிறது . எலும்புகளை பலப்படுத்தும் உணவு முறைகளான கோசு, காராட்டு, முள்ளங்கி , காலிபிளவர் எடுப்பதில்லை அப்படி எடுத்தாலும் அவைகளை நன்கு வேகவைக்கப்பட்டு அவற்றில் உள்ள சத்துகளை நீக்கிவிட்டு உண்ணும் முறையை நம்மவர்கள் கண்டுபிடித்து வெற்றி பெறுகிறார்கள் . எலும்ம்பு பலப்படுமா? பலவீனமடையுமா? வெல்லம் உண்பதும் நம் நாட்டு தவச (தானிய உணவு ) உண்பதும் கேவலமாக என்னப்படுகியது . இந்த தவச (தானிய ) வகைகள் கம்பு, கேழ்வரகு , சோளம் போன்றவை எலும்புகளை பலப்படுத்த கூடியவைகள் . இவைகளை எடுக்கிறேன் என கூறுகிறவர்களும் முறையில்லாத வழியில் எடுக்கிறனர் அளவிற்கதிகமாக சர்க்கரை சேர்த்தால் அதன் பலன் முழுமையாக கிட்டுமா?

இடுப்புவலி தீர்வுகள்

ஆங்கில வைத்திய சிகாமணிகள் எலும்பு தேய்ந்து விட்டது அல்லது அலுவலகத்தில் நீண்டநேரம் உட்கர்ந்திருகிரீர்கள் , அல்லது வேகமாக வாகனம் (எல்லாவித வாகனங்கள் ) ஓட்டுகிறீர் கள் என இப்படி காரணங்களை அடுக்கி தங்களது அதி நுட்பமான கண்டுபிடிப்புகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் . இதை கேட்கும் படித்தவர்களும் பாமரார்களும் ஆ என வாயை பிளந்து கேட்பது நமக்கு நன்கு கேட்கிறது . என்ன செய்வது ? மனிதன் மரித்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் மம்மியில் (பழங்கால இடுகைகள் ) எந்த சேதமும் இன்றி எலும்புகள் இருக்கிறது . அனால் இப்போது எலும்பு தேய்வு ஏன் ? நாம் சிந்தித்தோம் இல்லை . அதுவும் இல்லாமல் நீண்டநாட்கள் பயன்படுத்தியது கெடத்தானேசெய்யும் என்கிறார்கள் பயன் படுத்தியது கெடலாம் தவறில்லை இன்று பத்து பதினைந்து அகவை (வயது )குழந்தைகள் கூட இந்த இடுப்பு வலியினால் அவதிப்படுகிரார்களே அதற்க்கு என்ன சொல்லபோகிறீர்கள் என எவரும் கேட்பதில்லை ? குறிப்பாக எல்லா நோய்களுக்கும் இன்றைய முறையில்லாத உணவுகளே காரணமாகிறது ஆக முறையான உணவு முறைகளை எடுப்போம் . எலும்புகளை பலப்படுத்துவோம் .

எப்போது உட்கார்ந்தாலும் நேரே கூனல் விழாமல் உட்காருவோம்.
எண்ணெய் தேய்த்து குளிப்போம்
வாழைக்காய் ,கொத்தவரை ,வாழைபழம் போன்றவற்றை நீக்குவோம் .
எலும்புகளை பலடுத்தும
உணவுகளான கம்பு , எள்ளு, கேரட்டு , கோசு , முள்ளங்கி ,காலிபிளவர் போன்றவற்றையும்
வெல்லம் சேர்ந்த உணவு களையும் எடுப்போம்.
இடுப்பு வலி வந்த நிலையில் நாளும் வெந்தயம் நீரில் நினையவைது நீருடன் வெந்தயத்தை மென்று சாப்பிட்டு பின்னர்நீரை அருந்துவோம்
நோய் உள்ள நிலையில் பொடுதலை என்ற மூலிகை உணவாக எடுக்கவேண்டும் நல்ல பலனை தரும்.. மேற்கண்ட மூலிகையை வதக்கி கட்டலாம்.ஒத்தடம் கொடுக்கலாம்.
நோய் நீடித்த நிலையில் முறையான சித்த மருத்துவத்தை நடுவோம் நோய் முற்றாக குணமாகும் .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்.

பின்னர் விரிவாக இது குறித்து ஆய்வு செய்வோம் .

இந்த இடுகை நம்மை இந்த வலை பூவிற்கு அறிமுகபடுத்திய நண்பர் சுகுமார் கேட்டு கொண்டமைக்காக பதிவு செய்யப்படுகிறது .

அடுத்த எமது இடுகை டயாலிஸ்தேவையாMore than a Blog Aggregator

7 கருத்துகள்:

 1. நல்ல பயனுள்ள பதிவு இது...!!!

  பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 2. இன்றைய உணவுமுறை உண்ணுகிறவர்களுக்கு இரண்டு பங்கும் மருத்துவனுக்கு ஒருபங்கும் சேர்த்து உண்ணப்படுகிறது . //
  சரியாகச் சொன்னீர்கள். பயனுள்ள ஆக்கப்பூர்வமான கருத்துப்பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. எனக்கும் தேவையான பதிவு தயா.ஆனால் நான் சலாட்
  வகைகளை நிறையவே சேர்த்துக்கொள்கிறேன்.நன்றி !

  பதிலளிநீக்கு
 4. கணினி முன் நெடுநேரம் அமர்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதான இருக்கும்....

  மகளிர் அதிகம்பேருக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்..

  பதிலளிநீக்கு
 5. கவிதை வீதி சௌந்தர் சார் சொன்ன கருத்தை நானும் சொல்கிறேன்.
  சரி சார் பிட்ஸ் என்ன தீர்வு ????????? இதுக்கு தீர்வு சொல்லுங்க .

  பதிலளிநீக்கு
 6. வலிப்பு (பிட்ஸ்) பற்றி பின்னர் விரிவாக எழுதப்படும் .வருகைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் .

  பதிலளிநீக்கு
 7. பச்சை(சலாட்) காய் கள் எடுக்கலாம் அனால் அதற்கென்று வழிமுறைகள் உண்டு அடுத்த சில இடுகைகளில் தெளிவு படுத்தப்படும்.

  பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...