ஏப்ரல் 25, 2011

பனை / பதநீரின் மருத்துவ குணங்கள்




இன்று நாம் பழமை பற்றி பேசுவது வெறுமனே வரட்டுவாதம் அல்ல . உண்மையில் நாம் மண்ணில் மாற்றம் வேண்டும் என்பதற்கு தான். முந்தய இடுகையில் அம்மைக்கு யாழ்ப்பாணத்தில் பதநீர் வழங்குவார்கள் என ஹேமா குறிப்பிட்டு இருந்தார் . இந்த காலத்தில்தான் பதநீர் இறக்குவார்கள் எனவே அதைப்பற்றி எழுதலாமே என எண்ணி இந்த இடுகை .

இந்த பதநீர் ஒரு சைவ பானம்அதுமட்டும் அல்ல நமது தமிழதேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம் . நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும் ,பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள் .

தொழு நோயை நீக்கும் பதநீர்

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி
பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ் குறிப்பு உண்டு .

மாதவிடாய் தடை

மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி . வாய்வு , காட்டி முதலியவற்றினால் பெண்கள்அவதிபடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான சன்னி நோய்போல உண்டாகும் இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .

இரத்த கடுப்பு

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .

பதநீர்

இந்த பதநீர் ஒரு சிறப்பான நம் தேசிய குடிநீர் எண்பது நாம் அறிந்ததே இந்த பதநீரை இறக்க தமிழ் நாட்டில் தடை உள்ளது காரணம் வேலைவாய்ப்பில்லாத தமிழர்கள் வேலை பெற்றுவிடுவார்கள் என்பதாக இருக்குமோ ? அதுமட்டும் அல்லாமல் இந்த பதநீர் இறக்குவதால் மற்ற மயக்கப் பொருட்கள் (அரசுவிற்பதுதன் ) விற்பனை குறையும்தானே ?அதனால் முதலாளித்துவம் பயனடையாது தானே ? வருகிற புதிய அரசாகிலும் இந்த பதநீர் இறக்க மக்களுக்கு வாய்பளித்து பனைபொருட்களை சந்தை படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.

ஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள்

௧ .சக்கரை 28 .8 கிராம்
௨. காரம் 7 .௨ கிராம்
௩. சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்
௪. இரும்பு சத்து 5 .5 மி.கிராம்
௫ பாசுபரசு 32 .4 மி.கிராம்
௬. தயமின் 82 .3 மி.கிராம்
௭ ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்
௮ அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்
௯ . நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்
10 புரதம் 49 .7 மி.கிராம்
௧௧. கலோரிகள் 113 .3 மி.கிராம்

இதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் கருக்கலத்தில் / பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. எல்லோரின் இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.

பாலுணர்வை கூட்டிட

இதில் இயல்பாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவகுரிப்புகளும் காண கிடைக்கிறது சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை இதில் முறையான அறிவியல் ஆய்வுகள் கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் சித்த மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திட வேண்டும்
.
அழகான பனை மரம் ...அடிக்கடி நினைவில் வரும் ...அடிக்கடி நினைவில் வரும் ...


சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்More than a Blog Aggregator

5 கருத்துகள்:

  1. அனைவரும் அறிய வேண்டிய அற்புத பதிவு...

    வரும் தலைமுறைக்கு பதநீர் பற்றி தெரியாமல் போகம் வாய்ப்பும் இருக்கிறது... வரும் சந்ததியினருக்கு உங்கள் பதிவு மிக்க உதவும்...

    பதிலளிநீக்கு
  2. எல்லோருக்கும் உபயோகமான பதிவு....

    பதிலளிநீக்கு
  3. பதநீரில் இவ்வளவு இருக்கா!இப்ப எல்லாம் பாக்கெட் இல் பதநீர் வருகிறதே!

    பதிலளிநீக்கு
  4. உங்களின் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன்.அம்மை நோய்க்கு உடன் பதநீர் குடிக்கத் தருவார்கள் ஊரில்.இதைவிட பனையின் உபயோகங்கள்தான் எத்தனை.பனைமரக்காடே என்று பாடிக்கொண்டிருக்கிறோம் அகதி தேசத்தில் !

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...