நவம்பர் 04, 2010

அந்த மூன்று நாட்கள் .


அந்த மூன்று நாட்கள் .
மாறிவரும்
சூழலில் நோய்கள் எளிமையாகிப் போனது . இந்த நோய்கள்
எல்லாமே இயல்பானவை என எண்ணம் கொண்டு நோயை சுமப்பதை இனிமையாக கருதுகின்றார்கள் போலும் . இன்று நல்ல மனிதர்கள் அருகிப்போனத்தால் கல்லிடம் முறையிடும் வழக்கம் அதிகரித்துப் போனது .
அறிவுத்துறையினர் தம் வழித்தடத்தை மாற்றிக்கொண்டு விட்ட படியால் பூசையடிகள் பூரித்துப் போகிறனர் .

முறை இல்லாத உணவுகள் பல நோய்களை உண்டக்குக்வது போலவே பெண்களின் தாய்மையின் சுமையும் கூட்டி பெண்மையை படாத படு படுத்துகிறது . பழங்காலங்களில் தாய்மையை வளர்க்க பெரிதும் உணவுமுறைகள் காரணமாக இருந்தது . அதனால் தான் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றும் நூறாண்டு நலமேடு வாழ்ந்தனர் . இன்று அப்படி எல்லாம் இருக்கவில்லை . மிகவும் இளைய வயதில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் படாத பாடுபடுவதனை தாய்கள் வேதனைப்பட்டு அதை தவிர்க்க முடியாது என்று குழந்தைகளை ஆற்றுப் படுத்துகின்றனர் .
அந்தமூன்று நாட்கள் சுமையானவைதனா ?

பழங்கால உணவுமுறை இரசாயன கலப்பில்லாத இயற்கையோடு இணைந்த உணவுமுறைகள் . இன்றைய பரப்பான வாழ்க்கை முறை கட்டுப்பாடில்லாத உணவு முறையினை கொண்டதாக இருக்கிறது . அளவிற்கதிகமான . மென் குடிநீர் , குளம்பி(காபி ) கோக் , கலந்த உணவுகள் அளவிற்கு அதிகமான கொழுப்பு உணவுகள் . உணர்வுகளை கிளர்ந்து எழச்செய்யும் படக்கசிகள் போன்றவை நோவை வளர்க்கிறது . இது பெண்களுக்கு தெரிவதில்லை கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்கு குடிநீர் குடிப்பதைபோல ஊசி போட்டு நோவை பெரிதாக்கு கின்றனர் .
குழந்தை களுக்கு இளமையிலேயே எலும்புகளை வளப்படுத்தும் உணவுகளை கொடுக்கவேண்டும் . எள், வெல்லம், உளுந்து , போன்றவை கொடுக்க வேண்டும் . வாரம் இரண்டுநாள் எண்ணெய்க் குளியல் . செய்யவேண்டும் .பரபரப்பையும் அமைதி இன்மையும் நீக்கிக் கொண்டு எரியோம்ம்பல் (ஆசனபயிற்சி ) செய்து உடலையும் மனதையும் அமைதியாக்கிக் கொள்ள வேண்டும் . முறையில்லாத உணவுகளை விட்டு ஒழித்து கீரைகள் , காய்கள் , பழங்கள் அதிகமாக எடுக்க வேண்டும் .
வீட்டு விலக்கு நாட்களில் கடுமையான வலி சோர்வு தலைவலி போன்றவை இருப்பின் இயற்கையான முறையான உணவுகளை எடுக்கவேண்டும் . கடுமையான வலி இருப்பின் முருங்கைகீரை சாறு 25மிலி சிறிது பெருங்காயம் போட்டு தேவையான அளவு உப்பு கலந்து குடிக்க வலி நிற்கும் . தொடர்ந்து வலி இருப்பவர்கள் வீட்டு விலக்கு வரும்மூன்று நாட்களுக்குமுன்பே நாளும் மேற்கண்ட மருந்தை அருந்த நல்ல பலனை காணலாம் ....
அடுத்து


முறையற்ற வீட்டு விலக்கு ....
அதிக இரத்தப்போக்கு .....
மேலும் வீட்டு விலக்கு சிக்கல்கள் ......
உங்களின் கேள்வி கணைகளோடு ....

தொடர்வோமா ......More than a Blog Aggregator

6 கருத்துகள்:

  1. பெயரில்லா7:38 AM, நவம்பர் 05, 2010

    Hi Polur Dhayanidhi - thanks for the information. This could be useful for my female friends.

    One small suggestion, I follow your blogs for a while and I feel that you are scolding the society in each of your blog. We know that we are not perfect, but if you want others to follow the right thing, we need to spread the message across. Being polite would help.

    Just a suggestion, its your writing style anyway :)

    பதிலளிநீக்கு
  2. /////thamizhara neengal?/////
    வருகைக்கும் தந்த பட்டத்திற்கும் நன்றி சகோதரா... சிலரை சில கேள்வி கேட்க முன் சிந்தித்துக் கேட்க வேண்டும் என்று சொல்வார்கள்.

    ஃஃஃmakkalukku payan ulla vagaiyele eedupadalame?
    polurdhayanithiஃஃஃஃ
    உங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒரே உணவைத் தான் உண்பீர்களோ... சந்தேகமாயிருக்கிறது..

    பதிலளிநீக்கு
  3. மன்னிக்கணும் சகோதரம் நான் எழுத்தில் கூட வெளிப்படையாகவே கதைப்பவன்..
    நெருப்பிற்கு அருகில் இருப்பவனுக்கு தான் அதன் சூடு தெரியும்...
    சில இடங்களில் சிலது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறதே...

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் நெருப்பில் இருக்கலாம் நாங்கள் நாளும் வெந்து கொண்டிருப்பவர்கள்
    எங்களின் கையாலகாத நிலையும் சூழலும் என்செய்வோம் என்ற வேதனையும் வாட்டுகிறது .
    போளுர்தயநிதி

    பதிலளிநீக்கு
  5. ////நெருப்பிற்கு அருகில் இருப்பவனுக்கு தான் அதன் சூடு தெரியும்...
    சில இடங்களில் சிலது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறதே... ////
    சகோதரா நீங்கள் தவறாக கருதிவிட்டீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் சொன்ன விசயத்திற்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் தான் அப்படிக் கூறினேன். மன்னிக்கணும்.

    பதிலளிநீக்கு
  6. விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்தப் பதிவு . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...