
வள்ளுவன் என்ற பெயரினால் ஆன பதிவர் இப்படி கூறுகிறார் .
உலகிற்கே அறிவியலையும் நாகரீகத்தையும் வழங்கிய தமிழ சமூகம் இன்று
நோயாளியகிக் கொண்டு இருப்பதைப் பார்த்தால் வயிறு பற்றி எரிகிறது
அதற்கும் ஒரு மருந்து சொல்லுங்கள் என கேட்டு இருந்தார் .
உண்மைதான் நண்பரே உங்களின் பெயரே உங்களைக் காட்டிவிடுகிறது
சிறந்த தழிர்களின் ஆசானின் பெயரைத் தாங்கி இருக்கிறீர்கள் பாராட்டுகள்.
உண்மையில் தமிழரின் நோய்க்கு அடிப்படைக் காரணம் தமிழனை தமிழனே
மதிப்பதில்லை . தமிழ கலைகளை போற்றி பாதுகாப்பதில்லை. தமிழ கலைகளை
செய்கிறவர்களை ஆதரிப்பதில்லை இதனால் தமிழன் நோயாளியாகிப் போனான்
போய்கொண்டு இருக்கிறான் .இது வள்ளுவர் காலத்திலேயே தொடங்கி விட்டது தான்
என்றாலும் இப்போது தமிழன் நிலை மரணத்தின் பிடியில்... இப்போதாகிலும்
விழித்தால் நலம் பெறலாம் . ஒன்றுமில்லை .... தமிழ கலைகளையும் தமிழையும்
தமிழ அறிஞ்சர் களையும் காப்பது போற்றுவது பாதுகாப்பது .... தமிழன்
ஓரணியில் திரளுவது ... தமிழன் உலகெங்கும் தாக்கப் பட்டால் குரல்
கொடுப்பது... என சூடு சொரணை பெற்றுவிட்டாலே தமிழன் உலகின் உச்சத்திக்கு
சென்று விடுவான் அந்நியன் காலை நக்கும் தமிழன் சிந்திப்பான் என எண்ணுவோம் .
உலகின் உயர்ந்த மருத்துவம் புதையலாக நம் மண்ணில் சிறப்புகளைக்
கொட்டிக் கிடைக்கிறது . தமிழனோ அறியாமையில் வீழ்ந்து கிடக்கறான்
சிறந்த மருந்து குங்கிலியம் அறிவோம் .
தமிழ மருத்துவத்தில் மிகசிறந்த மா மருந்து குங்கிலியம் இது ஒருவகை
மரத்தின் பிசின் இந்த மரத்துக்கு கருமருது என பெயர் இந்தவகை மரங்கள்
நிறைய உண்டு எனினும் வெள்ளை ,சிவப்பு என இரண்டு வகை மட்டுமே
சிறப்புவாய்ந்த வையாக கருதப்படுகிறது பூனைக்கண் குங்கிலியம் என்ற ஒரு
சாதியும் உண்டு.
இது ...
வேப்பமுண்டாக்குதல்
கொழயகற்றுதல்
ஆகியவை குங்கிலியத்தின் சிறப்புகள் ஆகும்.
தந்திமேகம்
சீழ்விரணம்
எலும்பைப் பற்றிய விரணம் ஆகியவற்றைப் போக்கும் குணம் இதற்க்கு உண்டு .
வெட்டையால் பிறந்த நாளப் புண்
கொப்பூழ் விரணம்
சீழ்மேகம்
உள்மூல விரணம்
ஆகியவற்றைப் போக்கும்
கருமை , செம்மை எண்ணும் இருவித குங்கிலியத்தால் காது, உதடு நாசி முதலிய
இடங்களில் உண்டாகும் நோய்கள் மேகப் புண் கட்டிவாதவிருத்தி சூலை , கிராணி ,
கானாவிடம் , கீல்பிடிப்பு நீங்கும் .நகங்களைப் பற்றிய இரணம் நீங்கும்.
காததர நாசிநோய் கட்டிக்கடி மேகப்புண்
வாதவித்தி ரஞ்ச்சூளை வந்குனகம் - ஒதியிலைத்
திக்கி லிருக்த் திடமுள்ள வேவுபயக்
குகளி ருக்கனமக் குள். ( தேரையர் குணபாடம் )
குங்கிலியத்தை முறைப்படி உண்டுவர ஆண்மை பெருகும் உடல் குளிரும்..
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்.

இன்றைய
சூழலில் எல்லோருக்கும் எதை உண்ணுவது எப்படி உண்ணுவது என்பது
தெரிவதில்லை என்பதாக கடந்த பதவில் எழுதியிருந்தேன் . உண்மைதான் உண்ணத்
தெரிந்தவனுக்கு நோயில்லை என்பார்கள் . இப்போது நோயும் இன்னதென்று
தெரிவதில்லை எப்படி உண்பதேனவும் அறிவ தில்லை ஆகையால் காலம் முழுவதும்
நோயாளியாகவே கிடந்துவிடுவது சிலருக்கு பழகிவிட்டது .
நாம் கூட எல்லா உணவுகளையும் பட்டியலிட்டு இதை எல்லாம்
உண்ணலாம் எதெல்லாம் உண்ணக் கூடாது என அழகாக பட்டியலிடலாம் என
எண்ணினேன் இன்றைய உணவுகளின் பட்டியல் விண்ணை முட்டும் அளவிற்கு
உயர்ந்து உள்ளமையால் என்னால் பட்டியல் இடமுடியவில்லை. வாய்க்கு சுவையும்
வயிறு நிரம்பினால் போதும் என்ற உள வாற்றளுக்கு இன்றைய மனித விலங்குகள்
தள்ளப்பட்டு விட்டன .ஆனால் விலங்குகள் என மனிதனால் வருணிக்கப் படும் எந்த
விலங்கும் சுற்று சூழலை கெடுப்பதில்லை நோய்வந்த பின்னர் மனிதன் மாதிரி
தீனியை வலுக்கட்டாயமாக திணிப்பதுமில்லை. உடலில் கேடு நிகழ்ந்து விட்டால்
உணவை நிறுத்துவது விலங்குகளின் முதன்மையான பணியாக இருக்கிறது . ஆனால்
மனிதன் தீனிப் பையை வலுக்கட்டாயமாக நிரப்பி நோயை வலிந்து அழைக்கிறான்
நோய் உள்ளநிலையில் உணவை தவிருங்கள் என சொன்னால் வேற்று கிரக மனிதனை
பார்ப்பது மாதிரி நம்மை பார்க்கிறார்கள் . பெருந்தீனி நோயை உண்டாக்கும் .
இதைத்தான் வள்ளுவர் கழி பேரிரையான் கண் நோய் என்கிறார் .நாம்ம
வர்கள்தான் நல்லதை கேட்பதில்லையே ?
இங்குள்ள சில கொள்ளை (இந்த கணினிவேறு கொள்கை என அடித்தால்
கொள்ளை என வருகிறது ) கொலை செய்யும் கூட்டத்தார் என்ன புரியவில்லையா?
அதுதாங்க அரசியல் பிழைப்பளிகள் எடுத்ததுக்கு எல்லாம் காந்தி
...காந்தி... என்பர்கள் இதைத்தான் இந்த உலகத்திற்கு தமிழ் தேசிய தலைவர்
சொல்லவேண்டும் என திலீபனை காவு கொடுத்தார் தலைவருக்கும் தெரியும்
தீலீபன் மரித்துப் போவார் என இருந்தும் அமைதி வழியிலும் நாங்கள்
முயன்று பார்த்துவிட்டோம் என்பதை பதிவு செய்தார் . எந்த உண்மையை உலக
கொலைகாரர்கள் ஏற்றுக்கொன்றர்கள் . கொன்றுதான் அழித்து விட்டார்களே ? இதை
ஏன் சொன்னேன் என்றால் ஏறத்தாழ பதின்மூன்று நாள்கள உணவின்றி
நீரைக்கூட அருந்தாமல் திலீபன் உயிர்வாழ்ந்தார் . வெறும் நீரை மட்டுமே
அருந்தி வாழ்நாள் முழுவதும் கழிக்கயியலும் தெரிந்து கொள்ளத்தான்
சொன்னேன் .
கடினமான நோயுள்ள நிலையில் உணவை மறுப்பது நோயில் இருந்து
தன்னை முழுவதுமாக விடுவித்துக் கொள்ள முடியும் அல்லது நோய் என்னது என
கண்டறிந்து குறிப்பிட்ட அந்த நோய்க்கு பகையான அதாவது பொருந்தாத உணவை
மறுத்தல் மனிதன் செய்கிற நல்ல செயல் .இப்போது மனிதன் தான் நோயாளியாக
அல்லாவா இருக்கிறான் .பாவம் அவர்களுக்கத்தான் இதை படித்துக் கொண்டு
இருக்கும் உங்களுக்கு இல்லவே இல்லை .
இனிப்பு ;மண் ,நீர் இணைத்து தோன்றும்
புளிப்பு ;மண் ,தீ இணைத்து தோன்றும்
உப்பு ;நீர் ,தீ இணைத்து தோன்றும்
கசப்பு ;காற்று, விண் இணைத்து தோன்றும்
கார்ப்பு ;தீ . காற்று இணைத்து தோன்றும்
துவர்ப்பு ; மண் , காற்று இணைத்து தோன்றும்
காரம், கசப்பு ,துவர்ப்பு மிகையாக கொள்ள வளிக்(வாத )குற்றம் மிகையாகும் .
உப்பு ,புளிப்பு, காரம் மிகையாக கொள்ள பித்தம் மிகையாகும்
இனிப்பு ,புளிப்பு , உப்பு மிகையாக கொள்ள ஐ (கபம் மிகுதியாகும் )
சீதள வீரிய உணவுகள் வாயுவையும் கபம் போன்றதையும் மிகையாக்கும் .இது
பித்தத்தை குறைக்கும். கப வகை உணவுகள் வாயுவைக் குறைக்கும் சூடான
வீரிய உணவுகள் பித்தத்தை மிகையாக்கும் . இந்த மிகப் பெரிய அறிவியலும்
கண்டவர்கள் நமது பழந்தமிழ அறிவர்கள் (சித்தர்கள் ) அவர்களின் கால்
வழிவந்த சித்த மருத்துவத்தை பொன்னேபோல் காப்போம் பின்பற்றுவோம்

மனிதனைத் தவிர்த்து நோய்வந்த
நிலையில் விலங்குகள் பெரும்பாலும் உணவைத் தவிர்க்கவே செய்கிறது அல்லது
நோயை நீக்கிக் கொள்ள போராடுகிறது நோயுடன் கண்டதை தின்று வாயை கட்டாமல்
உண்டு கொழுப்பதில்லை விலங்கினங்கள். ஆனால் மனித படித்தவன் முதல் பாமரன்
வரையிலும் உணவைத் தவிர்க்க சொன்னால் நம்மை ஓருமாதிரி பார்க்கிறார்கள் .
அறிவை ஏற்ப்பதில் சிலருக்கு குழப்பம் மட்டுமல்ல அறியாமையும் கூடவே
சேர்ந்து விடுகிறது பாவம் விடுங்கள் அவர்கள் அறியாமையில் உள்ளார்கள் .
உணவு என்பது மனித உடலுக்கும் உயிர்வாழ்த்தலுக்கும்
இன்றியமையாத உணவாக இருக்க வேண்டும் ஆனால் இன்று உண்ணப்படும் உணவு
முறை மனிதனை நோயாளியக்ககுகிறதேயன்றி மனிதனை முறையான
வழிநடத்தவில்லை . இது எங்கிருந்து பெறப்பட்டது என்பது உண்மையில்
நமக்கு புரியவில்லை பழந்தமிழரின் உணவு முறை என்பது உலகினுக்கே
வழிகாட்டியாகவும் பழந்தமிழ உணவுமுறை ஒரு கட்டமைப்புடன் இருக்கும்
அதாவது முதலில் இனிப்பு இருக்கும் பின்னர் பருப்புகலந்த நெய்யும்
சேர்ந்து இருக்கும் அதற்க்கு பின்னர் சற்று காரம் சேர்ந்த உணவுகளும் பின்னர்
சாத்துநீர் (ரசம் ) கலந்த உணவு அதற்க்கு பின்னர் மோர் இருக்கும் இவைகள்
எல்லாம் முறையான உணவு முறையை கண்டதாகவும் செரிப்பதற்கு
எளிமையனதகவும் நோயை வரவழைக்காத வுணவு முறையாகவும் இருந்தது .
ஆனால் இன்று முறையில்லாத உணவுப் பழக்கம் முன்பு முறையான உணவுகள்
இருந்த இடத்தில் நோயை வரவழைக்கும் முரியில்லாத உணவுகள் இவைகள்
மனிதனை முற்றாக நோயாளியக்குதன்றி வேறொன்றும் செய்யவில்லை இந்த
பிழையான உணவுமுறையை சொன்னாலும் சிலர் அதற்க்கு நீங்கள் பொறுப்பேற்க முடியுமா என சவால் விடக்கூடும் .
உணவுமுறை முறையான உணவுத்திட்டம் கொண்டு இருக்கவேண்டும் இந்த
உணவுத்திட்டமானது நோயின்றி வாழ்வதற்கு இன்றியமையாத வனாக
இருத்தல் வேண்டும் அப்படி எல்லாம் பார்த்துக் கொண்டு இருப்பதில்லை இன்றைய
இளைய சமூகம் இதை எல்லாம் சொல்லவும் விடுவதில்லை சொல்லுவதுமில்லை
மனிதனை நோயாளியாக்கும் சப்பைக்கட்டு கட்டும் பேர்வழிகளின் கழிச்சல்
கூரமக்கி அதில் சுகமாக குளிர் காய்கின்றனர் . முதலின் உணவினை
பகுத்து உன்னப் பழக வேண்டும் .எந்த உணவு நல்லது நோயைதராமல்
முழுமையாக உடலைவளர்க்கும் என்பதை முறையனவர்களிடம் கேட்டுப்
பழக வேண்டும்
சாதாரண தடுமன் (சளி ) குளிர் காய்ச்சல் என எடுத்துக் கொள்வோம் இந்த
நேரத்தில் குளிர்ந்த சீத வீரியம் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்
காய்ச்சல் உள்ள நிலையில் உணவைத்தவிர்த்து எளிமையான உணவாக அரிசி
கஞ்சி எடுப்பது மிகவும் முறையான சரியான உணவுத்திட்டமாக இருக்கும்
இதைவிட்டுவிட்டு உடல் பாழடைந்த நிலயில் மீண்டும் மீண்டும் உடலை
கடினமாக வேலை வாங்க கூடாது இப்படி செய்வதால் உடல் கேடு அடையும்
என்பதில் எந்த ஐயமும் கொள்ளத் தேவையில்லை .
குளிர்கால நோய்கள் என எடுத்துக் கொள்வோம் இந்த நோய்களுக்கு
சீத வீரிய உணவுகள் பகையானது முதலில் நட்புணவு பகை உணவு
எது என துல்லியமாக கணிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும் தெரியவில்லை
என்றால் முறையனவர்களிடன் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் . குளிர்கால நோய்
என கொள்வோம் இந்த இலையில் சீத வீரியம் கொண்ட உணவுகளை
கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் அப்படி இல்லையெனின் நோய் தீவிரம் அடையும்
அதேபோல மூட்டுவலிகள் எனின் மூட்டுவலியை மிகயாக்கும் கிழங்கு வகைகள்
பருப்புவகைகள் முறையில்லாத அமிலத்தன்மை கொண்ட உணவுகள் ஆகியவற்றை
கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
இன்றைய உணவுகள் அளவிற்கதிகமான கொழுப்பு சத்து கொண்டவையாக உள்ளன
ஆனால் சரிவிகித உணவாக இருக்க வில்லை . உணவு என்பது வயிறு நிறைவதற்கு என
எண்ணிவிடுகின்றனர் அப்படி எல்லாம் இல்லை உடல் உறுப்புகள் அனைத்திற்க்கு
தனித்தனியான சுவைகள் கொண்ட தனியான சத்துகள் கொண்ட உணவாக இருக்க
வேண்டும் அப்படி இல்லாமல் ஒரேமாதிரியான உணவுகள் மனிதனை நோயாளியாக்கும்
எனவே முறையான உணவுகளைத் தெரிவு செய்து உன்னப் பழகி உண்ணத் தெரிந்தவனுக்கு நோயில்லை எனற பழந்தமிழரின் கோட்பாட்டை கடைபிடிப்போம்
குறிப்பு : நமது முந்தைய பதிவை படித்துவிட்டு கோவி . கண்ணன் என்பவர் நமது
இடுகையிலும் அவரின் இடுகையிலும் தனியான முட்டாள்களுக்காக எழுத வேண்டி
உள்ளது என பாவம் தனது இடுகையில் எழுதி என்னை முதல் ஆக்கி தன்னை
மிகவும் அறிவளியாக்கி இருந்தார் உண்மையில் நீங்கள் அறிவாளியாக
இருந்தால் உண்மையான தவற்றை சுட்டி காட்டி இருப்பீர்கள் யார் முட்டாள்
யார் தவறான வழிகாட்டுகிறார்கள் என்பதை இந்த சமூகம் தன் முடிவு செய்ய
வேண்டும் இது போன்ற இழிவான விமர்சனங்களை தவிர்க்க விரும்புகிறோம் .
உங்களின் முட்டாள் என்ற எனக்கான பட்டத்திற்கு நன்றி கோவி . கண்ணன் நீங்க உண்மையில் அறிவாளிதான் .
சித்தமருத்துவ்ங் காப்போம் நோய் வெல்வோம்
இன்றைய
விரைவு உலகத்தில் இளசுகள் பாடு மிகவும் போரட்டமானதே காரணம் அவன்
கெட்டுப் போவதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை வாரிவழங்கி விடுகிறது இன்றைய
உலகம் இவற்றை மீறி ஒருவன் நேர்மையாக இருப்பது சிக்கலானதாக இருக்கிறது
. காரணம் இன்றைய சூழல் என்பதை நாம் அறிவோம் . இப்படிப்பட்ட சூழலில்
தன்னையும் பாதுகாத்துக் கொண்டு இந்த குமுகத்தை பற்றி
சிந்திக்கிறார்கள் எனறால் அவர்களை வணங்கி வரவேற்க வேண்டும் ஆனால்
அப்படி எல்லாம் இந்த போலியுலகம் செய்வதில்லை மாறாக அவனை
கேவலப்படுத்தவே செய்கிறது .
இன்றைய முறைதவறிய உலகம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க
செய்வதில்லை. போராட்டமான உலகத்தில் இருந்து தன்னுடைய வாழ்நாளை ஓட்ட
வேண்டி இருகிறது வேண்டிய கல்வி , வேலைவாய்ப்பு பொருளாதார சூழல்
இவற்றிற்கு இடையே இந்த சமூகம் கொட்டும் போலித்தனத்திக்கும், திரைப்பட
, தொலைகாட்சி , பாலுறவு கட்சி போன்றவற்றின் தாக்கத்தினால் தானாய்
அவற்றில் கரைத்துக் கொள்ளுகிறான் அல்லது அவற்றில் இருந்து விலகி
இருபவனை கண்டு கொள்வதில்லை அல்லது கேவலப்படுத்துகிறது என்பது உண்மையே .
இல்லை என்பவர்கள் வரலாம் சான்று கட்டுகிறேன் .
இப்படிப்பட்ட சூழலில் பலவிதமான உளவியல் ரீதியான
போராட்டங்களுக்கு ஆளாகிறான் இதன் தாக்கத்தினால் உணவு பிடிக்காமை அல்லது
முறைதவறிய உணவு தூக்கமின்மை அல்லது முறைமீறிய இரவு பகல் என பாராது
தூங்குவது என உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொண்டு தன்னுடைய
வாழ்நாளை கடத்துகிறான் . இது போராட்டம் மிகுந்த வாழ்வியலை அடிப்படையாக
கொண்டு இயங்கு கிறவர் களின் நடைமுறையாக இருக்கிறது .
இப்படி பட்ட சூழலில் இளசுகள் பலவிதமான போரட்டங்களுக்கு
ஆளாகிறார்கள் அவர்களை கண்டு கொள்வதுமில்லை வழிகட்டுவதுமில்லை இந்த
சூழலில் இயற்க்கை அவனை பாலுறவிற்கு தூண்டுகிறது இந்த சூழலில் பல
இளைஞ்சர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவாதாக கூறுகிறார்கள் . இதற்க்கு
விடிவு ? சுய இன்பம் தவறில்லை நன்மையே என தவறன வழி காட்டும்
நல்லவர்களும் உள்ளார்கள் சுய இன்பத்தால் உடலின் சக்தியெல்லாம்
வீணாகிவிட்டது பலமிழந்து விட்டேன் உடலே பலமின்மையல் அவதிப்படுயறேன் .
கண்கள் குழிவிழுந்து பலவீனப் பட்டுவிட்டேன் என கூறிவருகிறார்கள் .
இளமை நீர்மேல் எழுத்தாம் என்பார்கள் இந்த அகவையில்
கல்வியும் பொருள் தேடலும் அதற்க்கு பின்னலான கலவியும் தேவை இதை
நிறைவு செய்து கொள்ளாமையால் தவறான பாதைக்கு பயனமாகிரார்கள்
என்ன செய்யலாம் ?
உங்களின் இலக்குகளை தீர்மானியுங்கள் .
தவறான வழிகாட்டலை தீர்கமாக நிராகரியுங்கள்
முறையன எதிர்காலத்தை திட்டமிடுங்கள்
சுய இன்பம் தவறானது என கருத்தில் கொள்ளுங்கள்
இந்த எண்ணம் வரும் போது ஒக (யோகாசனம் )இருக்கை கடைபிடியுங்கள் .
இரவில் தூக்கமின் மையால் பல இளஞ்சர்கள் சுய இன்பம் பழகுவதா தெரிவிக்கின்றானர்
தூக்க மின்மைக்கு காரணங்களை கண்டறிந்து விடை தேடுங்கள் .
தூக்க மின்மைக்கு கனவுகளும் ஏக்கங்களும் காரணகிறது அவற்றை நீக்கி மூச்சு பயிற்சி பழகி நீண்ட உறக்கத்திற்கு வித்திடுக .
சிக்கல் கள் எனின் சிக்கலின் அளவு நீளத்தை நீண்ட பட்டியலிடுக . பின்னர் தியானம் செய்து உறங்க செல்க .
சிக்கல் எனின் அந்த சிக்கலின் தன்மையை முழுமையான பட்டியல் இடுக அதற்கான தீர்வுகள் உண்மையில் பின்னர் கிடைக்கும் என முழு நிறைவோடு உறங்க செல்க .
வாழ்கை உங்களுக்கானது உங்களின் இந்த பட்டறிவு இந்த குமுகத்திற்க்கனது உணர்ந்து வாழுங்கள் .
வாழ்க்கை உங்களுக்கானதே
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்